இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்: ('அல்கவ்ஸர்'எனும்) என் தடாகம் ஒரு ம...
மறுமை நாளில் நபியவர்களுக்கென ஒரு தடாகம் உள்ளதாகவும் அதன் நீளமும் அகலமும் ஒரு மாதகால பிரயாணம் செய்யும் தூரத்துக்கு நிகரானது என இந்த ஹதீஸில் குறிப்பிடுக...
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத...
மறுமை நாளில் மரணம் கருப்பும் வெள்ளை நிறமும் கலந்த ஆண் ஆட்டின் தோற்றத்தில் கொண்டுவரப்படும் என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். அவ்வேளை சொர்க்க வாசிகளே! என அ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நீங்கள் உங்களின் விடயங்ளை அல்லாஹ...
உலகியல் மற்றும் மார்க்கம் சம்பந்தமான விவகாரங்களில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், கெடுதிகளைத் தவிர்த்துக் கொள்வதிலும் அல்லாஹ்விடமே நாம் பொறுப்புச் ச...
அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : உயர்ந்தோனாகிய கண்ணியமிக்க அல்லாஹ்விடமிருந்து அறியப் பெற்றதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிற...
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அல்லாஹ் அநியாயம் இழைப்பதை தன்மீது ஹராமாக்கிக் கொண்டதாகவும், அதனை தனது படைப்பினங்களுக்கு மத்தியிலும்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனுக்கு அவகாசம்...
இணைவைப்பு மற்றும் பாவகாரியங்கள் ஆகியவற்றின் மூலம் அநியாயத்தில் ஈடுபட்டு அத்துமீறி நடப்பதையும், மக்களின் உரிமைகளில் அக்கிரமம் செய்து நடப்பதையும் நபி ஸ...
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அறிவித்துள்ளார்கள்: ('அல்கவ்ஸர்'எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது.அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது.அதன் கூசாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை' என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்' என்றும் கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நீங்கள் உங்களின் விடயங்ளை அல்லாஹ்வின் மீது உண்மையாகவே பொறுப்புச் சாட்டினால் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போன்று உங்களுக்கும் உணவளிப்பான். அவை அதிகாலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்புகின்றன'.
அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : உயர்ந்தோனாகிய கண்ணியமிக்க அல்லாஹ்விடமிருந்து அறியப் பெற்றதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்.
எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். எனது அடியார்களே, நான் உணவளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். எனது அடியார்களே! நான் ஆடை அளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானோ பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன்.
எனது அடியார்களே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. இன்னும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்கள், ஜின்கள் ஆகிய நீங்கள் அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது. என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஓர் ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் குறையும் அளவிற்குக் கூட குறைத்து விடுவதில்லை. எனது அடியார்களே! இவைதான் உங்களுடைய செயல்கள். அவற்றைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். நலவு அல்லாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் அநியாக்காரனுக்கு அவகாசம் வழங்கிக்கொண்டிருப்பான், ஆனால் அவனை தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவனை விடவும் மாட்டான்' என்று நபியவர்கள் கூறிவிட்டு, ஸூறா ஹூதின் 102 ம்; வசனத்தை ஒதினார்கள். ''மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய கிராமங்களை உம் இரட்சகன்; தண்டிக்கும் போது அவனது தண்டனை இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடி –தண்டனை- வேதனை மிக்கதாகவும்; மிகக் கடினாமானதாகவும் இருக்கும்''
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூஅன்ஹூமா கூறுகிறார்கள் : அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அறிவிக்கிறார்கள் : "அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு தீமையையே அல்லாஹ் எழுதுகிறான்".
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்தவற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப் படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள்'
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினர். அப்போது, '(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். மேலும், அல்லாஹ் தடுத்த எந்தவோர் உயிரையும் நியாயமின்றி கொலைசெய்யவும் மாட்டார்கள், மேலும் விபச்சாரம் செய்யவும் மாட்டார்கள்' எனும் (திருக்குர்ஆனின் 25:68 வது) வசனம் அருளப்பெற்றது. மேலும், '(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.. எனும் (திருக்குர்ஆனின் 39:53 வது) வசனமும் அருளப்பெற்றது.
ஹகீம் இப்னு ஹிஸாம் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: 'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு 'தர்மம் செய்தல், உறவினரைச் சேர்(ந்து வாழ்)தல்' போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?' என கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்! என்று பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல ம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் ஒரு முஃமினுக்கு அவன் செய்த எந்த நற்செயலிலும் அநீதி இழைக்க மாட்டான்;.(கூலி வழங்காது விட்டுவிடமாட்டான்) அதன் காரணமாக அவனுக்குரிய கூலி இவ்வுலகில் வழங்கப்பட்டு, மறுமையிலும்; அதற்கான வெகுமதி கிடைக்கும். காஃபிரைப் பொறுத்தவரை, அவன் இந்த உலகில் அல்லாஹ்வுக்காக செய்த நற்செயல்களுக்கான வெகுமதி அவனுக்கு வழங்கப்படும், அவன் மறுமையை அடையும் போது, அவனுக்கு வெகுமதி அளிக்கக்கூடிய எந்த நன்மையும் இருக்காது.'
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: உயர்வும் கண்ணியமிக்கோனாகிய தம் இறைவன் அறிவித்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: 'ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று கூறினார். உடனே உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய இறைவன், 'என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான் பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்' என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, 'என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று பிரார்த்தித்தார். அப்போதும் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய அல்லாஹ் -இறைவன்- , '(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான். எனது அடியானை மன்னித்து விட்டேன், அவன் நாடியதைச் செய்யட்டும்' என்று சொல்கிறான்.
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை செவியேற்றால், அல்லாஹ் எனக்கு எவ்வளவு நன்மை விளைவிக்கிறானோ அந்த அளவிற்கு அதன் மூலம் நான் பயனடைகிறேன்;. நபித் தோழர்களில் ஒருவர் என்னிடம் ஹதீஸ்களைக் கூறினால், நான் அவரிடம் சத்தியம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், அவர் சத்தியம் செய்தால், நான் அவரை நம்புகிறேன். பின்வரும் இந்த ஹதீஸை அபூபக்கர் கூறினார்- அபூபக்கர் உண்மையைச் சொன்னார்; அவர் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுவதை நான் கேட்டேன், என்று கூறினார்: ஒரு அடியான் பாவமொன்றை செய்து விட்டு அழகிய முறையில் வுழூசெய்து பின் எழுந்து தனது பாவத்திலிருந்திருந்து மீளும் நோக்கில் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அவனை அல்லாஹ் மன்னிக்காது விட்டுவிடுவதில்லை பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆல இம்ரானின் 135 வசனத்தை ஓதிக்காட்டினார்கள் "மேலும் அவர்கள் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லாது தங்களுக்கு தாங்களே அநியாயம் இழைத்துக்கொண்டாலோ அல்லாஹ்வை நினைவுகூர்ந்து உடனே தங்ளது பாவங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள்".