/ 'நிச்சயமாக அல்லாஹ் ஒரு முஃமினுக்கு அவன் செய்த எந்த நற்செயலிலும் அநீதி இழைக்க மாட்டான்;.(கூலி வழங்காது விட்டுவிடமாட்டான்) அதன் காரணமாக அவனுக்குரிய கூலி இவ்வுலகில் வழங்கப்பட்டு, மறுமையிலும்; அதற்கான வெகுமதி கிடைக்கும்...

'நிச்சயமாக அல்லாஹ் ஒரு முஃமினுக்கு அவன் செய்த எந்த நற்செயலிலும் அநீதி இழைக்க மாட்டான்;.(கூலி வழங்காது விட்டுவிடமாட்டான்) அதன் காரணமாக அவனுக்குரிய கூலி இவ்வுலகில் வழங்கப்பட்டு, மறுமையிலும்; அதற்கான வெகுமதி கிடைக்கும்...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல ம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் ஒரு முஃமினுக்கு அவன் செய்த எந்த நற்செயலிலும் அநீதி இழைக்க மாட்டான்;.(கூலி வழங்காது விட்டுவிடமாட்டான்) அதன் காரணமாக அவனுக்குரிய கூலி இவ்வுலகில் வழங்கப்பட்டு, மறுமையிலும்; அதற்கான வெகுமதி கிடைக்கும். காஃபிரைப் பொறுத்தவரை, அவன் இந்த உலகில் அல்லாஹ்வுக்காக செய்த நற்செயல்களுக்கான வெகுமதி அவனுக்கு வழங்கப்படும், அவன் மறுமையை அடையும் போது, அவனுக்கு வெகுமதி அளிக்கக்கூடிய எந்த நன்மையும் இருக்காது.'
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் முஃமின்களுக்கு அல்லாஹ் வழங்கும் அளப்பரிய அருள் குறித்தும், காபிர்களுடனான அவனின் நீதி குறித்தும் விவரிக்கிறார்கள். முஃமினைப் பொறுத்தவரை அவன் செய்த நற்செயலுக்கான கூலியில் எதுவும் குறைக்கப்படமாட்டாது. மாறாக அவனின் வணக்கவழிபாட்டிற்காக அவனுக்கு உலகத்தில் நன்மை வழங்கப்படுவதுடன்,மறுமையில் அவனுக்குரியவை சேமிக்கப்படும். சிலபோது அவனுக்குரிய கூலிகள் அனைத்தும் மறுமையில் வழங்கப்படுவதற்காக பாதுகாக்கப்படும். காபிரைப் பொருத்தவரை இவ்வுலகில் அவன் செய்த புன்னியங்களுக்கான நன்மைகளை கூலியாக வழங்கிடுவான்.ஆனால் அவன் மறுமைக்காக சென்று விட்டால் அங்கே கூலியாக வழங்கப்பட எந்த வெகுமதியும் இருக்காது.இம்மை மறுமையில் நற்செயல்கள் பயனளிக்க குறித்த நபர் கட்டாயம் ஈமான் கொண்டிருத்தல் அவசியமாகும்.

Hadeeth benefits

  1. யார் குப்ரில் -இறைநிராகரிப்பில் - மரணிக்கிறாரோ அவரின் செயல்கள் எவ்விதப்பலனையும் அளிக்காது.