அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று க...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பாவங்களில் மிகப்பெரியது குறித்து வினவப்பட்டது; அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: பெரும்பாவங்களில் மிகவும்...

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நான், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்' என்று பதிலளித்தார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்றேன். 'உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது' என்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தூய்மையும்; உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எனது சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் ஏற்க மறுத்தோரை தவிர' என்று கூறினார்கள். அதற்கு 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர்கள்; யார்?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'கிறிஸ்தவர்கள் மர்யமின் புதல்வரை (ஈஸாவை) அளவு கடந்து புகழ்ந்ததை போன்று என்னை நீங்கள் அளவு கடந்து புகழ வேண்டாம், நான் அல்லாஹ்வின் அடியானாவேன், எனவே அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றே கூறுங்கள்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'உங்களில் ஒருவருக்கு தனது பெற்றோர்; தனது குழந்தை, ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் அதிக நேசத்திற்குரியவராக ஆகும்வரையில் அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'என்னைப் பற்றி ஒரு வார்த்தையேனும் எத்தி வையுங்கள். பனூ இஸ்ராயீல்கள் (இஸ்ரவேல் சந்ததியினர்) பற்றி கூறுங்கள் குற்றமில்லை. என் மீது வேண்டுமென்றே யாரேனும் பொய்யுரைத்தால் அவர் நரகத்தை தனக்குரிய தங்குமிடமாக எடுத்துக் கொள்ளட்டும்'.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல்மிக்தாத் இப்னு மஃதீயக்ரிப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். தனது பஞ்சனையில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மனிதரிடம் எனது செய்தி வந்து சேரும்.அவ்வேளை அவன் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் அடிப்படை இறைவேதமாகும்.அதில் அனுமதிக்கப்பட்டவை எவையென்பதை காண்கிறோமோ அதனை அனுமதிப்போம். அதில் எது ஹராம் என்பதாக காண்கிறோமோ அதனை நாம் தவிர்த்து ஹராமானதாகக் கருதுவோம். நபி ஸல்லல்லாஹு அவர்கள் ஹராமாக்கியவை அல்லாஹ் ஹராமாக்கியவை போன்றாகும்.))

ஆஇஷா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா இருவரும் கூறினார்கள் : 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும் போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே! தமது நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ் தளங்களாக ஆக்கிக் கொண்ட கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது'.

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் : உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அபீ ஸீனியாவில் தாம் கண்ட தேவாலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அந்த தேவாலயம் 'மாரியா' என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா (ரழி) குறிப்பிட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்'அவர்களில் நல்லடியான் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அவர்கள்தான்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிகவும் தீயவர்களாவர்;'என்று கூறினார்கள்.

ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் 'உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் ரழியலல்லாஹு அன்ஹு அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கஸ்தளங்களை வழிபாட்டுத்தளங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அடக்கஸ்த் தளங்களை வழிபாட்டுத்தளங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்' என்று கூறுவதை நான் கேட்டேன்.