- அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்திவைப்பதற்கு ஆர்வமூட்டப்பட்டிருத்தல், ஒரு மனிதன் மார்க்க விடயங்களில் தான் மனனமிட்டு, விளங்கிய விடயத்தை அது குறைவாக இருந்தாலும் எத்திவைக்க வேண்டும்.
- அல்லாஹ்வை முறையாக வணங்குவதற்கும், உரிய முறையில் -சரியான வடிவத்தில்- மார்க்கத்தை எத்திவைக்கவும் மார்க்க அறிவை கற்பது கடமையாகும்.
- நபியவர்களின் கடுமையான கண்டனத்திற்கு உட்படாது எச்சரிக்கையாக இருக்க, எந்த ஹதீஸாக இருந்தாலும் அதனை எத்திவைக்க முன் அல்லது பிரசுரிக்க(பரப்ப) முன் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வது கட்டாயமாகும்.
- குறிப்பாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் பொய் கூறுதல் என்ற பாவத்தில் விழாதிருக்க, வார்த்தையில் உண்மை பேசுமாறும், நபியவர்களின் ஹதீஸில் பொய்யுரைக்கும் விடயத்தல் எச்சரிக்கையாக இருக்க வேணடும் எனவும் தூண்டப்பட்டிருத்தல்.