- அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பும், அவர்கள்தாம் இச்சமூகத்தின் மிகச் சிறந்தவர் என்பதும், நபியவர்களின் மரணத்திற்கு பின் கிலாபத்திற்கு மிகத்தகுதியானவர் என்பதும் இந்நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- மண்ணறைகள் மீது வழிபாட்டுத்தளங்களைக் கட்டுவது முன்னைய சமுதாயங்களின் கண்டிக்கத்தக்க வழிமுறைகளில் ஒன்றாகும்.
- இணைவைப்பில் வீழ்வதை விட்டும் எச்சரிப்பதற்காக , தொழுகை நடாத்தப்படும், அல்லது அவற்றை முன்னோக்கித் தொழப்படும் வணக்கஸ்தளங்களாக மண்ணறைகளை எடுத்து, அவற்றின் மீது வழிபாட்டுத்தளங்களோ (பள்ளிவாயில்களோ), குவிமாடங்களோ கட்டப்படுவது தடுக்கப்பட்டிருத்தல்.
- இணைவைப்புக்கு இட்டுச்செல்வதினால் நல்லடியார்களின் விடயத்தில் எல்லைகடந்து செயற்படுவது எச்சரிக்கப்பட்டிருத்தல்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எச்சரித்த விடயங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதினால் தான் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னும் இதனை வலியுறுத்திக் கூறியமை இதன் முக்கியத்தை எடுத்துக்காட்டுகிறது.