- புகழ்தல் மற்றும் மகிமைப்படுத்துதல்; ஆகிய விடயங்களில் ஷரீஆ வரையரையை மீறி செல்வதானது இணைவைப்பிற்கு வழிவகுக்கும் என்பதினால் கண்டிக்கப்பட்டிருத்தல்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்த இந்த விடயம் எமது முஸ்லிம் சமூகத்தில் நிகழ்ந்து விட்டது. இதன் விளைவாக ஒரு பிரிவினர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிலும், இன்னொரு பிரிவினர் அஹ்லுல் பைத்தினரிலும், மற்றொரு பிரிவினர் அவ்லியாக்களிலும் அளவுகடந்து சென்றதினால் இணைவைப்பில் வீழ்ந்துள்ளனர்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை அல்லாஹ்வின் அடியான் என வர்ணித்திருப்பது தான் அல்லாஹ்வால் இரட்சிக்கப்படுபவர் என்பதை தெளிவுபடுத்தவேயாகும். ஆகவே இரட்சகனின் பிரத்தியேக பண்புகளில் ஏதாவது ஒன்றை அவர்களுக்கு கற்பிப்பது கூடாது.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை அல்லாஹ்வின் தூதர் என வர்ணித்திருப்பது தான் அல்லாஹ்விடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதை தெளிவுபடுத்துவதேயாகும். ஆகவே அவர்களை உண்மைப்படுத்தி அவர்களை பின்பற்றுவது கடமையாகும்.