அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'உங்கள் வீடுகளைக் அடக்கஸ்தளங்களாக ஆக்கிவிடாத...
தொழுகை நடைபெறாத அடக்கஸ்தளங்களைப் போன்று வீடுகளை ஆக்கி விட வேண்டாமென நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் தடுத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து ஸுற...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபையி இப்னு கஃப் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உபை இப்னு கஃபிடம் இறைவேதத்தில் உள்ள மிகவும் மகத்தான வசனம் எது என்று கேட்டபோது அவர் பதில் அளிப்பதற்கு தயங்கினார்.பி...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே...
ஸூறா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதியவரை அல்லாஹ் தீங்கு மற்றும் துரதிஷ்டவசமான விபத்து போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறான் என நபியவர்கள் தெரிவிக்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்தாக அந் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பிரார்த்தனையே (துஆவே...
பிரார்த்தனை வணக்கமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அந்தப் பிரார்த்தனை அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று தூய்மையுடனும் இத...
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை திக்ர் -நினைவுகூர்வதில் பேரார்வமுடையவராக திகழ்ந்தார்கள் என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தெரிவிக்கிறார்க...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'உங்கள் வீடுகளைக் அடக்கஸ்தளங்களாக ஆக்கிவிடாதீர்கள், நிச்சயமாக ஷைதான் ஸூரா பகரா ஓதப்படும் வீட்டைவிட்டும் விரண்டோடுகின்றான்'.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபையி இப்னு கஃப் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (என்னிடம்), அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அவர்கள் அபுல் முன்திரே!, இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என (மீண்டும்) கேட்டார்கள். நான் அல்லாஹு லாஇலாஹ இல்லா{ஹவல் ஹய்யுல் கய்யூம் எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம் என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே! என்றார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமானதாகும்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்தாக அந் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'. என்று கூறிவிட்டு ஸுறா காஃபிரின் 60வது வசனத்தை ஓதினார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன்.எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக் கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தொட்டு-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை'.

அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஆடை கிழிந்து இத்துப்போவதை போன்று உங்கள் உள்ளத்தில் உள்ள ஈமானும் குறைந்து பலவீனமடைந்து விடுகிறது. எனவே உங்களின் ஈமானை புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள்'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'ஓர் அடியான் ஸுஜூத் செய்து கொண்டிருக்கும் நிலையில்தான் தனது இரட்சகனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான், ஆகவே அந்நிலையில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்'.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் அதிகமாக ஓதும்; பிரார்த்தனையாக ' அல்லாஹும்ம ரப்பனா ஆதினா பித்துன்யாக ஹஸனதன் வபில்ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' காணப்பட்டது. (யா அல்லாஹ் எமது இரட்சகனே ! எமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்; நலவைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பிலிருந்து எம்மை காப்பற்றுவாயாக!

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து அதில் ஊதுவார்கள் பின் அதில், குல் ஹுவல்லா அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதுவாரகள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), 'அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), 'லாஇலாஹ இல்லல்லாஹு' (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), 'அல்லாஹ் அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்கு உரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் எதுவித குற்றமுல்லை'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : 'யார் ஒருவர்; 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்: உண்மையான வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறுமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் யாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக உள்ளான் என 10 தடவைகள் கூறினால் அவர் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியிலிருந்து நான்கு அடிமைகளை உரிமையிற்றவரைப் போன்றவராவார்'.