- அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக சிறு, பெரு தொடக்குகளிலிருந்து தூய்மையாக வேண்டுமென்ற நிபந்தனை கிடையாது.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொடர்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தமையை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
- எல்லா நேரங்களிலும் நபியவர்களை முன்மாதிரியாகக்கொண்டு அல்லாஹ்வை திக்ர் செய்ய ஆர்வமூட்டப்பட்டடிருத்தல் என்றாலும் இயற்கைத்தேவையை நிறைவேற்றுவது போன்ற விவகாரங்களின் போது திக்ர் செய்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.