அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்' என ஒரு மனிதர் கூறினார். அதற...
நபித்தோழர்களில் ஒருவர் அவரின் இம்மை மறுமைக்கு பயனளிக்கும் ஒரு விடயத்தை காட்டித்தருமாறு நபியவர்களிடம் வேண்டினார். அதற்கு நபியவர்கள் கோபம் கொள்ள வேண்டாம...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: '(பிறரை)அடித்து வீழ்த்துபவன் வீரனல்...
உண்மையான வலிமை என்பது உடல் வலிமையோ, அல்லது பலசாலியை வீழ்த்துவதோ அல்ல. மாறாக மிகப்பெரும் பலசாலி என்பவன் கடுமையான கோபத்தின் போது தனது உள்ளத்துடன் போராட...
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் தனது சகோதரருக்கு வெட்கம் குறித்து உபதேசம் செய்து கொண்டிருப்பதை செவிமடுத்த...
ஒரு மனிதர் தனது சகோதரனுக்கு அதிகம் வெட்கப்படுவதை விட்விடுமாறு உபதேசிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செவி மடுத்தார்கள், அதற்கு நபியவர்கள் வெட...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் மிக்தாம் இப்னு மஃதீ கர்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : 'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவ...
முஃமின்களுக்கு மத்தியில் தொடர்பை –உறவை- வலுப்படுத்தி அன்பையும் நேசத்தையும் பரப்பும்; வழிமுறையொன்றை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும...
பிறருக்கு செய்யும் உபகாரமும், பயன்படத்தக்க ஒவ்வொரு வார்த்தையும் செயலும் தர்மமாகும், அதற்கு கூலியும், வெகுமதியும் உண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்...

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்' என ஒரு மனிதர் கூறினார். அதற்கு நபியவர்கள், 'நீர் கோபப்படாதீர்' என பதிலளித்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் கேட்டார். நபியவர்கள்; 'நீர் கோபப்படாதீர்' என்றே கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: '(பிறரை)அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல. உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்'.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் தனது சகோதரருக்கு வெட்கம் குறித்து உபதேசம் செய்து கொண்டிருப்பதை செவிமடுத்தார்கள், அப்போது நபியவர்கள் ' வெட்கம் ஈமானைச் சார்ந்தது என்று கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் மிக்தாம் இப்னு மஃதீ கர்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : 'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் அவனை நேசிப்பதை அறிவிக்கட்டும்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூபர்ஸதுல் அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். ((மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.))

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : '(கணவனை இழந்த) விதவைக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்;. அல்லாஹ்வையும் இறுதிநாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது அயல் வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்புகிறாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனக்கு கூறியதாக அபூதர் அல்கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர், அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'.

"நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும்.மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் மேலும் மனிதன் உண்மை பேசிக் கொண்டும் உண்மையைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அவன் அல்லாஹ்விடம் உண்மையாளன் என்று எழுதப்படுவான்.நீங்கள் பொய் சொல்வதையிட்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் நிச்சயமாகப் பொய் தீமைக்கு வழிகாட்டும். மேலும் நிச்சயமாக தீமை நரகிற்கு வழிகாட்டும்.எனவே மனிதன் பொய் பேசிக் கொண்டும் பொய்யைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என்று எழுதப்படுவான்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'இரக்கமுள்ளவர்களுக்கு அர்ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்'.