நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்...
இந்நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள். அந்தக்கடம...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் ச...
முஃமின்களைத் தவிர வேறு எவறும் சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதே போல்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அயலவரும் வாரிசுதாரராக ஆகி விடுவாரோ என...
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்டை வீட்டார் குறித்து கரிசனை செலுத்துமாறு கட்டளைப் பிரப்பித்து, அதனை பற்றி பல முறை தொடர்ந்து தனக்கு கூறியவண்ணம் இருந்த...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை பாதுகாக்கிறாரோ அல்லாஹ் அ...
யார் தனது சகோதர முஸ்லிமின் மானத்தை அவர் இல்லாத வேளை அவனை கண்டிப்பது அல்லது அவனுக்கு மோசமான வார்த்தையினால் அவனை ஏசுவது போன்ற விடயங்களை விட்டும் பாதுகாக...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அவர்களின் துணைவியார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ளார்கள் : 'மென்மை எதில் இருக்கிறதோ, அவற்றை அது அ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் மென்மை, கனிவு, பேச்சிலும் செயலிலும் நிதானம், இங்கிதம் போன்ற பண்புகளைப் கடைப்பிடித்து ஒழுகுவது, விவகார...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்".
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அயலவரும் வாரிசுதாரராக ஆகி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அயலவர் -அண்டைவீட்டார் குறித்து எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அவர்களின் துணைவியார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்துள்ளார்கள் : 'மென்மை எதில் இருக்கிறதோ, அவற்றை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்'.
"நிச்சயமாக மார்க்கம் இலகுவானது.மார்க்கம் அழிந்த போகாது.ஆனால் அது மிகைப்படுத்தப் பட்டாலேயன்றி.எனவே அதனை நடு நிலையாகவும்.மிகைப் படுத்தாமலும் செய்து வாருங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.இன்னும் நல்லமல் மூலம் காலையிலும்,மாலையிலும்,இரவின் ஒரு பகுதியலும் உதவி தேடுங்கள்"என்று"ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இதனை இமாம் புஹாரீ அவர்கள் அறிவித்துள்ளார்கள்.மேலும் இன்னொரு அறிவிப்பில் "கருமத்தை நடு நிலையாகச் செய்யுங்கள்.மிகைப் படுத்தாதீர்கள்.காலையிலும்,மாலையிலும்,இன்னும் இரவின் ஒரு பகுதியிலும் அதனை நடு நிலையாகச் செய்யுங்கள்"என்று பதிவாகியுள்ளது.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாம் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர் 'வருத்திக்கொண்டு காரியங்களை மேற்கொள்வதை விட்டும் நாம் தடுக்கப்பட்டோம்' என்று கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்'.
உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (அங்கும் இங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'உணவு உண்டதும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தி புகழும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்'.
ஸலமா இப்னுல் அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் 'வலக் கையால் உண்பீராக!' என்று சொன்னார்கள். அவர், 'என்னால் முடியாது' என்றார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், 'உம்மால் முடியாமலே போகட்டும்!' என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது.