- மக்களிடம் அல்லாஹ்வின் நேசத்தை ஏற்படுத்தி, நன்மையை ஊக்குவிப்பதே ஒரு முஃமினின் கடமையாகும்.
- இஸ்லாமிய அழைப்புப் பணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முறையை மதிநுட்பத்துடன் ஆராய்வது அழைப்பாளிக்கு அவசியமாகும்.
- நற்செய்தி கூறுதல் மகிழ்ச்சி, மற்றும் ஆர்வத்தைத் தோற்றுவிப்பதுடன், அழைப்பாளருக்கும், அவர் மக்களுக்கு முன்வைக்கும் விடயங்களிலும் ஒரு வித அமைதி ஏற்படுத்துகின்றது.
- சிரமப் படுத்தல் வெறுப்பு, பின்வாங்கல், அழைப்பாளரின் பேச்சில் சந்தேகம் போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றது.
- அடியார்கள் மீதான அல்லாஹ்வின் அருள் விசாலமானது, அவனே அவர்களுக்கான சிறப்பான மார்க்கத்தையும், இலகுவான சட்டதிட்டங்களையும் பொருந்திக் கொண்டுள்ளான்.
- இங்கு இலகுபடுத்துதல் என குறிப்பிடுவது இஸ்லாமிய மார்க்கம் கொண்டு வந்த அனுமதித்த விடயங்களாகும்.