அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'திருடர்களில் மிகவும் மோசமானவர் அவருடை...
மனிதர்களில் மிகக்கேவளமானவன் தொழுகையில் களவு செய்பவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். தொழுகைத் திருடனுக்கு மாற்றமாக பிறர...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: (தொழுகை நடத்தும்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ்...
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமுக்கும் முன் முந்தி செல்பவருக்கு கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்கிறார்கள். அவ்வாறு நடந்து கொள்பவ...
ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்ப...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று தடவைகள் கூறக் கூடியவர்களாக இருந்த...
அபுஸ்ஸுபைர் அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு ஸுபைர் அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுத்ததும் பின்வருமாறு ஓதுவார்கள் : 'லாஇலாஹ இல்லல்லாஹு...
இந்த மகத்தான திக்ரை ஒவ்வொரு கடமையான தொழுகைளிலும் ஸலாம் கொடுத்ததன் பின் ஓதி தஸ்பீஹ் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இதன் கருத்து பின்வருமாறு : 'லா...
முகீரதுப்னு ஷுஃபாவின் எழுத்தாளர் வர்ராத் கூறுகிறார்: முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் முகீரதுப்னு ஷுஃபா எனக்கு எழுதுமாறு பின்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகையைத் தொடர்ந்து : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'திருடர்களில் மிகவும் மோசமானவர் அவருடைய தொழுகையில் திருடுபவராவார்' அதற்கு நான்; 'அவன் எப்படி தொழுகையை திருடுகிறான்?' எனக் கேட்டேன் அதற்கு அவர்கள்: 'அவர் அதன் ருகூவையோ அல்லது ஸுஜூதையோ சரியாகச் செய்வதில்லை' என்று கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: (தொழுகை நடத்தும்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் தன் தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவிடுவதை அல்லது அவரின் தோற்றத்தை கழுதையின் தோற்றமாக மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?

ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் 'அஸ்தஃபிருல்லாஹ்' (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறி விட்டு பின்வரும் திக்ரை ஓதுவார்கள் : 'அல்லாஹும்ம அன்தஸ் ஸலாமு, வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி'.' (பொருள்) யா அல்லாஹ்: நீ ஈடேற்றமானவன், உன் மூலமே ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியமும் மான்பும் உடையவனே, நீ உயர்ந்தோனாய் உள்ளாய்) வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்களிடம் இஸ்திபார் செய்வது எப்படி என வினவினேன், அதற்கு அவர்கள் 'அஸ்தஃபிருல்லாஹ்' அஸ்தஃபிருல்லாஹ்' என்று நீ கூற வேண்டும் என்றார்கள்.

அபுஸ்ஸுபைர் அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு ஸுபைர் அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுத்ததும் பின்வருமாறு ஓதுவார்கள் : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ் ஸனாஉல் ஹஸன். லாஇலாஹ இல்லல்லாஹு முஃக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காபிரூன்'. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையதே. சிறப்பும் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன.

முகீரதுப்னு ஷுஃபாவின் எழுத்தாளர் வர்ராத் கூறுகிறார்: முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் முகீரதுப்னு ஷுஃபா எனக்கு எழுதுமாறு பின்வரும் ஹதீஸை குறிப்பிட்டார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகை முடிந்ததும் பின்வருமாரு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதய்த்த, வலா முஃதிய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து .(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவராலும் கொடுக்கவும் முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் உன்னிடம் பயன் அளிக்காது)

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன் : லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள், மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள், இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள், ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகியனவே அவை. ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும். அத்துடன் முஅத்தின் அதான் கூறி பஜ்ரும் உதயமாகிவிட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் என ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் கூறினார்கள். மேலும் ஒரு அறிவிப்பில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜும்ஆத் தொழுகையின் பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் என இடம்பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூகதாதா அஸ்ஸுலமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''உங்களில் ஒருவர் பள்ளிக்குச்சென்றால் அவர் உட்கார முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்''.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகி றார்கள் : 'வெள்ளிக்கிழமை தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 'மௌனமாக இரு' என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்'. (ஜும்ஆவின் பலனை இழந்துவிட்டாய்).

இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : நான் மூல நோயினால் பீடிக்கப்பட்டிருந்தேன். எனவே தொழுகை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவினேன். அதற்கு நபியவர்கள்: 'நின்ற நிலையில் தொழுவீராக, அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்த நிலையில் தொழுவீராக, அதற்கும் முடியாவிட்டால் சாய்ந்த நிலையில் தொழுவீராக' என்று கூறினார்கள்.

நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

மஹ்மூத் இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியை –மஸ்ஜிதுன் நபவியை- மீள் நிர்மாணிக்க –புணரமைக்க- நாடியபோது அதனை மக்கள் விரும்பவில்லை, அதனை நபியவர்களின் காலத்தில் இருந்த அமைப்பில் இருப்பதை விரும்பினார்கள். அப்போது அவர்கள் 'யார் அல்லாஹ்வுக்காக பள்ளியை கட்டுகிறாரோ அதனைப்போன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அவனுக்காக கட்டுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாகக் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'தர்மத்தினால் செல்வம் குறைந்து விடுவதில்லை, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை, அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை'.