- பள்ளியினுள் அமர்வதற்கு முன் தஹிய்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துக்களை தொழுதுகொள்வது வரவேற்கத்தக்கதாகும்.
- மேற்படி தொழும் கட்டளையானது பள்ளியினுள் சென்று உட்காருபவருக்காகும். ஆனால் யாராவது ஒருவர் பள்ளிக்குச்சென்று அமர்வதற்குமுன் வெளியே வந்துவிட்டால் அவ்வாறானவரை இக்கட்டளை உள்ளடக்காது.
- ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கையில் தொழுகைக்காக சென்றவர் அவர்களுடன் சேர்ந்து தொழல் வேண்டும். அவர் இரண்டு ரக்அத் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழவேண்டிய அவசியம் இல்லை.