- ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில்; பேசுவது தடுக்கப்பட்டதாகும்- ஹராமாகும்.அது தீமையைத் தடுத்தல், ஸலாத்திற்கு பதிலுரைத்தல், தும்மியவருக்குப் பதில் கூறல், போன்ற எந்த வகையான பேச்சாக இருந்தாலும் சரியே.
- ஜும்ஆ உரையின் போது இமாமுடன் ஒருவர் பேசுதல், அல்லது இமாம் ஒருவருடன் பேசுவது போன்றவை இதிலிருந்து விதிவிலக்களிக்கப்படுகிறது.
- இரண்டு உரைகளுக்கும் மத்தியில் தேவையின் போது பேசுவது அனுமதிக்கப்பட்டதாகும்.
- இமாம் உரைநிகழ்த்திக்கொண்டிருக்கையில் நபியவர்களின் பெயர்கூறினால் இரகசியமாக அவர்களின்; மீது ஸலாத்தும் ஸலாமும் கூறுவீராக. அதே போன்று இமாம் பிரார்த்தனை செய்தால் அந்த துஆவிற்கு இரகசியமாக ஆமீன் கூறுவீராக.