- இந்த திக்ருகளை ஒவ்வொரு பர்ழான தொழுகைக்குப் பின்னரும் பேணி ஓதிவருவது விரும்பத்தக்கதாகும்.
- காபிர்கள் வெறுத்த போதிலும், ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தைக் கொண்டே பெருமையடைந்து, அதன் அடையாளச் சின்னங்களை வெளிப்படுத்த வேண்டும்.
- ஹதீஸில் 'துபரஸ்ஸலாத்' (தொழுகையின் பின்) என்ற வார்த்தை இடம் பெற்று குறிப்பிட்ட விடயம் ஒரு திக்ராக இருந்தால் அது ஸலாம் கொடுத்ததன் பின் ஒத வேண்டியது என்பதையும், அது ஒரு 'துஆ' பிரார்த்தனையாக இருப்பின் அது தொழுகையை முடிக்க முன் -ஸலாம் கொடுக்க முன்- ஒதவேண்டியது என்பதைக் குறிக்கும்.