நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஆதமின் மகனே! நீர் (எனது திருப்தியை அடைந்திட) செலவு செய்வீர...
ஆதமின் மகனே நீ கட்டாயமான மற்றும் ஆகுமான விடயங்களில் செலவு செய்வீராக, நான் உனக்கு அதனை தாராளமாகவும் அதற்குப் பதிலாகவும் நிரப்பமாகத் தருவேன். மேலும் உனத...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்க...
ஒரு மனிதர் தனது மனைவி, பெற்றோர் பிள்ளைகள் போன்ற தன்மீது செலவு கடமையான குடும்பத்தார்க்கு அல்லாஹ்வை நெருங்கி, அவனிடம் நன்மையை எதிர்பார்த்து செலவு செய்தா...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவனுக்கு அல்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடனாளிக்கு கால அவகாசம் அளிப்பவர் அல்லது கடனைத் தள்ளுபடி செய்பவர் குறித்தும் இவ்வாறு நடந்து கொள்பவருக்குக் கிடைக்க...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'விற்றாலும், வாங்கினாலும், கடனைத் திருப்பக் கேட்டாலும் மென்மையா...
தனது வியாபாரத்தில் தாராளத்தன்மையுடன், வல்லல் தன்மையுடனும், மென்மையாகவும் நடந்து கொள்ளும் அனைவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரார்த்தித்...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: (முற் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக...
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் குறித்துக் குறிப்பிடுகிறார். அவர் மனிதர்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அல்லது தவணை அடிப்பட...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஆதமின் மகனே! நீர் (எனது திருப்தியை அடைந்திட) செலவு செய்வீராக. உமக்காக நான் செலவு செய்வேன் . என்று அல்லாஹ் கூறினான்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு செலவு செய்தால், அது தர்மமாக அமையும்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவனுக்கு அல்லது அவனுக்கு விட்டுக் கொடுப்பவனுக்கு, அல்லாஹ்வின் அர்ஷின் நிழலன்றி வேறு நிழல் இல்லாத மறுமை நாளிலே, தன் அர்ஷின் நிழலின் கீழ் அல்லாஹ் நிழல் அளிப்பான்".
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'விற்றாலும், வாங்கினாலும், கடனைத் திருப்பக் கேட்டாலும் மென்மையாக நடந்து கொள்ளும் ஓர் அடியானுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!'.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: (முற் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தன்னுடைய (அலுவலரான) வாலிபரிடம், '(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக் கூடும் என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவரின் பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்துவிட்டான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக கவ்லா அல்அன்ஸாரிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: 'சில மனிதர்கள் அல்லாஹ்வின் செல்வத்தை தான் விரும்பிய விதத்தில் அநியாயமான முறையில் கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'உடலுறவில் ஈடுபடாமல், பாவங்கள் செய்யாமல் ஹஜ் செய்தவர் தனது தாய் அன்று ஈண்டெடுத்த பாலகன் போன்று திரும்புவார்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : ' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள்: அல்லாஹ்வின் தூதரே 'ஜிஹாதை விடவுமா?' என்று கேட்டனர். அதற்கு 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' எனப் பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் உங்களது தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்க்க மாட்டான், இருப்பினும் உங்களது உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கின்றான்.'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். இறை நம்பிக்கையாளனான முஃமினும் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்'.