- மனிதர்களின் கைவசம் இருக்கும் செல்வம்,(சொத்து) அல்லாஹ்வுக்குரியது. அவற்றை முறையற்ற முறையில் தாம் நினைத்த பிரகாரம் கையாள்வதை தவிர்த்து, மார்க்கம் அங்கீகரித்த முறையில் செலவு செய்வதற்கு அவர்களை அல்லாஹ் பிரதிநிதியாக ஆக்கியுள்ளான். ஆகவே இந்த விடயம் முஸ்லிம்களில் அதிகாரம் படைத்தோர்,(ஆட்சித்தலமைகள்), மற்றும் ஏனைய முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான நியதியாகும்.
- பொதுச்சொத்து விவகாரத்தில் ஷரீஆவின் கடுமையான நிலைப்பாட்டை இந்த ஹதீஸ் பிரதிபளிக்கிறது. யார் பொதுச்சொத்து விவகாரங்களில் ஏதாவது ஒன்றை பொறுப்பேற்கிறாரோ அவர் அந்த பொதுச்சொத்தை திரட்டியமை பற்றியும், அதனை செலவு செய்தது குறித்தும் மறுமையில் விசாரிக்கபடுவர்.
- இந்த எச்சரிக்கையினுள் யாரெல்லாம் சொத்து –பணம் வைத்துக்கொண்டு அதனை ஷரீஆ அங்கீகரித்த முறையிலன்றி வேறுவிதமாக கையாள்கிறார்களோ அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிக் கொள்ளும். குறிப்பிட்ட பணம் அல்லது செல்வம் தனக்கோ பிறருக்கோ சொந்தமாக இருப்பினும் சரியே.