அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூத...
கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லஹ்வின் தூதரே ஐவேளைத் தொழுகைகளுக்கு என்னை பள்ளிவாயிலுக்கு அழைத்து வர எனக்கு உ...
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அத...
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது? அதற்கு நபியவர்கள்; பர்ழான தொழுகைகளை அல்லாஹ்வும் அவ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு கூறுகின்றார்கள் : 'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் மு...
பெரும்பாவங்களை விட்டும் விலகியிருக்கும் காலமெல்லாம், தினமும் நிறைவேற்றும் ஐவேளை தொழுகைகளும், ஒவ்வொரு வாரமும் நிறைவேற்றும் ஜும்ஆத் தொழுகையும், ஒவ்வொரு...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறியதாக அல்...
அல் ஹதீஸுல் குத்ஸிய்யில் அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸூறதுல் பாத்திஹாவை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியி...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்)...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத காபிர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் ஆகியோருக்கிடையிலான ஒப்பந்தமும், உடன்படிக்கையும் தொ...

அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை' என்று கூறி, வீட்டிலேயே தொழுது கொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, 'தொழுகை அறிவிப்பு சப்தம் (அதான்) உமக்குக் கேட்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' (கேட்கிறது) என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!' (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல் என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல் என்றார்கள்;(இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்) இவற்றை நான் கேட்ட கேள்விகளுக்கு இவற்றை குறிப்பிட்டார்கள், நான் (கேள்வியை) மேலும் அதிகப்படுத்தியிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் இன்னும் அதிகமாக கூறியிருப்பார்கள்.”

நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு கூறுகின்றார்கள் : 'ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களை ஒருவர் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு அவைகள் குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகையை (ஸுறா பாத்திஹாவை) எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், 'என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்' என்று கூறுவான். அடியான் 'அர்ரஹ்மானிர் ரஹீம்' (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், 'என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்' என்று கூறுவான். அடியான் 'மாலி;கி யவ்மித்தீன்;' (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், 'என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்' என்று கூறுவான். மேலும் 'என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்' என்றும் கூறுவான் ) மேலும், அடியான் 'இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்' (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், 'இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான். அடியான் 'இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வலழ் ழால்லீன்'. (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்களின் வழியுமல்ல வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் 'இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : 'நிச்சயமாக ஒரு (முஸ்லிம்) அடியானுக்கும்; இணைவைப்பிற்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் '.

ஸாலிம் இப்னு அபுல் ஜஃத் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் நான் தொழுது ஓய்வு பெற்றால் சிறப்பாயிருக்குமே! என்று கூற அங்கிருந்தவர்கள் இதனை குறையாகப் பார்த்தார்கள் இதற்கு அவர், தான் அல்லாஹ்வின் தூதர் கூறுவதை செவிமடுத்துள்ளேன். பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்.

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் : ஒவ்வொரு கடமையான மற்றும் ஸுன்னத்தான தொழுகைகளிலும், ரமழானிலும் அதுவல்லாத நேரங்களிலும் தக்பீர் கூறுவார்கள்.தொழுகைக்காக எழுந்து நின்றால் (இஹ்ராம்)தக்பீர் கூறுவார்கள், ருகூவிற்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள், ருகூஉலிருந்து முதுகை நிமிர்ததும் போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ஸுஜூதிற்கு செல்ல முன் 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள், பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் எழும்பும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்ததும் அபூஹுரைரா ரழியல்லாஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகக்ள்; படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்'.

அபூ உமாமா ரழி அறிவிக்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதரே! எந்த துஆ அல்லாஹ்விடத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது என நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, இரவின் கடைசி நேரத்திலும் பர்ளான தொழுகைக்கு பின்னும் என்றார்கள்

ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'நாங்கள் முழு நிலவுள்ள-பௌர்னமி- இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு சந்திரனை நோக்கி 'இந்த சந்திரனை நீங்கள் தடங்கலின்றி (தெளிவாக கஷ்டமின்றி) காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!' என்று கூறினார்கள்'. பின்னர் நபியவர்கள் (வஸப்பிஹ் பிஹம்திரப்பிக) என்ற வசனத்தை ஓதினார்கள்' பொருள் : சூரிய உதயத்திற்கு முன்னறும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் உனது இரட்சனின் புகழைக் கொண்டு துதிப்பீராக'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல் கஸ்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'ஸுப்ஹ் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்யும் நிலையை நீங்கள் ஏற்படுத்திட வேண்டாம். ஏனெனில், அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால், அதைக் கண்டுபிடித்தே தீருவான். பின்னர் (வரம்பு மீறி நடந்துகொண்ட) அவனை நரக நெருப்பில் அல்லாஹ் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்'.