அல்லாஹ்வின் தூதரே! எந்த துஆ அல்லாஹ்விடத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது என நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. இரவின் கடைசி நேரத்திலும் பர்ளான தொழுகைக்கு பின்னும் என்றார்கள்....
அபூ உமாமா ரழி அறிவிக்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதரே! எந்த துஆ அல்லாஹ்விடத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது என நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, இரவின் கடைசி நேரத்திலும் பர்ளான தொழுகைக்கு பின்னும் என்றார்கள்
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்
விளக்கம்
துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நேரம் குறித்து நபியவர்களிடன் கேட்கப்பட்ட போது இரவின் கடைசிப்பகுதி என்றார்கள் அத்துடன் பர்லான தொழுகையின் பின் என்றும் சொன்னார்கள்.இதில் பர்லான தொழுகையின் இறுதிப்பகுதி என்பது ஸலாம் கொடுப்பதற்கு முன்னுள்ள நேரம் என்பது இதன் கருத்தாகும்.அல்லாஹ் தொழுகை முடிந்த பின் திக்ரை ஏற்படுத்தி தந்திருப்பது இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.பர்லான,நபிலான தொழுகைகளின் பின் வழமையாக பிரார்த்தனையில் ஈடுபடுதல் ஒரு பித்அத்தாகும்,அது நபி வழியல்ல.ஏனெனில் அவ்வாறு செய்வதாயின் ராதிபான சுன்னத் தொழுகையிலும் இதை கடைப்பிடிக்க வேண்டும்.இந்த விடயத்தை சில வேளைகளில் செய்வதில் எவ்விதப்பிரச்சினையும் இல்லை.மிகவும் ஏற்றமான விடயமாகும். காரணம் என்னவெனில் தொழுகை முடிந்ததும் திக்ரைத் தவிர வேறு விடயத்தை இஸ்லாம் மார்க்கமாக சொல்ல வில்லை. இதனை தொழுகை நிறைவேற்றி விட்டால் அல்லாஹ்வை (திக்ர்) செய்யுங்கள் என தனது திருமறையில் குறிப்பிடுவதனாலும், நபியவர்கள் தொழுகையின் இறுதிப்பகுதியில் ஸலாம் கொடுப்பதற்கு முன் பிரார்த்தனை செய்யுமாறு வழிகாட்டி, தொழுகையின் பின் துஆ கேட்குமாறு வழிகாட்டாததினாலும், இதனை விட்டு விடுவதே மார்க்கமாகும் இந்தவிடயமானது ஹதீஸின் அடிப்படையிலும்,பகுத்தறிவு ரீதியாகவும் பொருத்தமான நிலைப்பாடாகும், ஏனெனில் தொழுபவர் தனது தொழுகையை முடிப்பதற்கு முன் அல்லாஹ்வுடன் உறவாடி அவனிடம் பிரார்த்திப்பதினாலாகும்
Share
Use the QR code to easily share the message of Islam with others