அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக கழிவறைக்குள் நுழையும்போது அல்லாஹ்விடம் ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கை விட்டு...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்களை அராக் மரக் குச்சியினால் அல்லது அது போன்றவைகளினால் சுத்தம்செய்வது வாயிலுள்ள அழுக்குகள், துர் வாடை ஆகியவற்றை...
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையு...
வாரத்தில் ஒரு நாள் குளிப்பது பருவவயதை அடைந்த புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். அதில் அவர் தன்னை சுத்தப்படுத்திக்க...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : "இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தச...
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலும் மற்றும் நபிமார்களின் மரபுகளிலும் உள்ள ஐந்து விடயங்களை தெளிவுபடுத்துகிறார்கள்; அவை பின்வரும...
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர...
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு அதிகம் இச்சை நீர் வெளிப்படுவதாக அறிவிக்கிறார்கள். மத்யு' என்பது வெள்ளை நிறத்திலான பசைபோன்ற மென்மையான நீராகும். இத...

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸி' எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். பொருள்: யா அல்லாஹ்! உன்னிடம் ஷைத்தான்களில் ஆண் மற்றும் பெண்ணகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்தும், இறை திருப்தியைப் பெற்றுத் தரும்'.

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : "இயற்கை மரபுகள் ஐந்தாகும் : விருத்தசேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியனவாகும்''.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி வினவுவவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவர்களிடம் இது பற்றி கேட்டு வருவதற்கு அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது; 'அவர் தனது ஆண்குறியைக்(ஆணுறுப்பை) கழுவிவிட்டு வுழு செய்யட்டும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். புஹாரியின் அறிவிப்பில்' 'நீ உன்னுடைய ஆண்குறியைக் கழுவிவிட்டு வுழுச் செய்து கொள்' என்று இடம்பெற்றுள்ளது.

உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பி;ன்னர் அவர்கள் குளிப்பார்கள் . பின்னர் விரல்களால்; தலை முடியின் அடிப்பாகம் நனையுமளவிற்கு கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.' நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆஇஷா(ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்கள்.

அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னை ஒரு தேவைக்காக அனுப்பிவைத்தார்கள். அப்போது எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளிப்பு கடமையாகி) விட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நான் (குளிப்புக்கு தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். (ஊர் திரும்பியதும்) இந்தச் செய்தியை நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "தமது கையை பூமியில் ஓர் அடி அடித்து விட்டு,தமது வலக் கரத்தால் இடது கையையும் இரு முன்னங்கைகளையும் (இரு கைகளால்) தமது முகத்தையும் தடவி விட்டு, இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும் என்று கூறினார்கள்.

முகீரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் ஒரு பயணத்தின்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (வுழூச் செய்தபோது) அவர்களின் இரண்டு காலுறைகளையும் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதைவிட்டுவிடுவீராக, கால்கள் இரண்டும் வுழூவுடன் இருக்கும் நிலையில்தான் காலுறைகளை அணிந்தேன்' என்று கூறிவிட்டு அவ்விரு காலுறைகளின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்'

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். 'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?' என்று கேட்டதற்கு, ' வேண்டாம், அது ஒரு நரம்பு நோய், மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்குத் தொழுகையை விட்டுவிட்டு, பின்னர் குளித்து தொழுது கொள்' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் ஒருவருக்கு வயிற்றில் ஏதாவது (சத்தம்) கேட்டு ஏதும் காற்று வெளியேறியதா இல்லையா எனும் சந்தேககம் ஏற்பட்டால், அவர் சத்தத்தைக் கேட்காத அல்லது காற்று வெளியேறியதாக உணராத வரை (தொழுகையை முறித்து) பள்ளியை விட்டு வெளியேற வேண்டாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : பாங்கு சொல்பவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்)என்றால் நீங்களும் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் 'அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்' (பொருள் : அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய வேறு இறைவனில்லை என்று நான் சாட்சிகூறுகிறேன்.) என்றால் நீங்களும் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் (பொருள் : (முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி மொழிகிறேன்' என்றால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ், (பொருள் தொழுகைக்காக விரைந்து வாருங்கள்) என்றால், அப்போது நீங்கள் 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்' (பொருள்: நன்மையை செய்வதற்கோ தீமையிலிந்து தவிரந்திருக்கவோ அல்லாஹ்வின் உதவியின்றி முடியாது' என்று சொல்ல வேண்டும்; பிறகு அவர் 'ஹய்ய அலல்ஃபலாஹ்' என்றால் அப்போதும் நீங்கள் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லவேண்டும் பிறகு அவர் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லவேண்டும்; பிறகு அவர் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்றால் நீங்களும் 'லாஇலாஹ இல்லல்லாஹ' என்று உள்ளத்தின் உறுதியுடன் கூறினால் அத்தகையோர் சுவர்க்கம் புகுவர்'.

தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் (முஅத்தின்) அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.