- இஸ்லாம் சுத்தம் மற்றும் தூய்மைக்கு வழங்கியிருக்கும் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
- ஜும்ஆத் தொழுகைக்காக குளிப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னாவாகும்.
- குளிக்கும் போது தலையையும் உடலையும் கழுவுங்கள் என்பதில் உடலைக் கழுவுங்கள் என்பது அனைத்துப்பகுதிகளையும் உள்ளடக்கிக் கொண்டாலும் இது குறித்து கரிசனை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மக்கள் அசௌகரியப்படுமளவிற்கு துர்நாற்றம் இருப்பதை உணரும் ஒவ்வொருவரும் குளிப்பது கடமையாகும்.
- ஜும்ஆதினத்தின் சிறப்பு காரணமாக அத்தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்டதாகும்.