/ நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி வினவுவவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவர்களிடம் இது பற்றி கேட்டு வருவதற்கு அல்மிக்தாத்...

நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி வினவுவவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவர்களிடம் இது பற்றி கேட்டு வருவதற்கு அல்மிக்தாத்...

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி வினவுவவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவர்களிடம் இது பற்றி கேட்டு வருவதற்கு அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது; 'அவர் தனது ஆண்குறியைக்(ஆணுறுப்பை) கழுவிவிட்டு வுழு செய்யட்டும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். புஹாரியின் அறிவிப்பில்' 'நீ உன்னுடைய ஆண்குறியைக் கழுவிவிட்டு வுழுச் செய்து கொள்' என்று இடம்பெற்றுள்ளது.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு அதிகம் இச்சை நீர் வெளிப்படுவதாக அறிவிக்கிறார்கள். மத்யு' என்பது வெள்ளை நிறத்திலான பசைபோன்ற மென்மையான நீராகும். இது ஆண் குறியிலிருந்து இச்சை மேலீட்டால் அல்லது குடும்பவாழ்வில் ஈடுபட முன்னர் வெளிப்படும். அது வெளியேறுகையில் என்ன செய்யவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை . நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகளான பாத்திமாவின் கணவர் என்பதால் இது குறித்து நபியவர்களிடம் கேட்க வெட்கப்பட்டார். எனவே இது குறித்து அறிந்து கொள்ள, நபியவர்களிடம் அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பி வைத்தார். அவர் நபியவர்களிடம் இது விடயமாக கேட்டபோது: நபியவர்கள் தனது ஆண்குறியை நன்றாக கழுவிவிட்டு பின் வுழு செய்யுங்கள் என பதிலளில்தார்கள்.

Hadeeth benefits

  1. அலி இப்னு அபீதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு குறித்துக்காட்டப்பட்டிருத்தல். அதாவது வெட்கமானது இன்னொருவர் மூலமாவது கேள்வி கேட்பதை விட்டும் அவரைத் தடுக்கவில்லை.
  2. பத்வா- மார்க்கத்தீர்ப்பை கோருவதில் ஒருவரை பதிலாக நியமிப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
  3. ஒருவர், நலன் கருதி தான் வெட்கப்படுவதைக் குறித்து இன்னொருவரிடம் கூறுவது அனுமதிக்கப்ட்டதாகும்.
  4. இச்சை நீர் அசுத்தமாகும். எனவே உடம்பில் மற்றும் ஆடையில் பட்டால் அதனை கழுவுவது வாஜிபாகும்.
  5. மதி வெளியாகுவது வுழுவை முறிக்கும் காரியங்களுள் ஒன்றாகும்.
  6. ஆண்குறியுடன், இரு விதைகளையும் கழுவுவது வாஜிபாகும். இதற்கான ஆதாரம் வேறொரு ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.