- குளிப்பு: சாதாரணக் குளியல் என்றும் பூரணமான குளியல் என இரு வகைப்படும். சாதாரணமாகக் குளித்தல் என்பது ஒருவர் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளுதல் என்ற நிய்யத்துடன் குளித்தல். அதாவது வாய்கொப்பளித்து நாசுக்கு நீர்செலுத்தி சிந்தி விட்டு உடல் முழுவதிலும் நீர் ஊற்றிக் கொள்வதைக் குறிக்கும். ஆனால் பூரணமானக் குளித்தல் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குளித்துக் காட்டியது போன்று குளிப்பதாகும்.
- ஜனாபத் என்பது விந்தை வெளியேறியவர் அல்லது விந்து வெளியேராவிட்டாலும் உடலுறவில் ஈடுபட்டவரைக் குறிக்கும்.
- கணவன் மனைவி இருவரும் ஒரே பாத்திரத்தில் குளிப்பதும் அவர்களின் இருவரின் அவ்ரத்துக்களை பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும்.