நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது ச...
இந்த சமூகத்தில் உள்ள ஒரு யூதன் அல்லது கிறிஸ்தவர் அல்லது இவர்கள் அல்லாத பிறமதம் சார்ந்த எவராயினும், தங்களுக்கு நபி ஸல்லலலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மார...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் : 'மார்க்கத்தை எல்லை மீறி பின்பற்றுவோருக்கு (தீவிரமானோர்)அழ...
எவ்வித சரியான வழிகாட்டலோ அறிவோ இன்றி மார்க்கத்திலும் உலக விவகாரங்களிலும், வார்த்தை மற்றும் செயல்களிலும் தீவிரமாகவும் கடுமையாகவும் நடந்துகொள்வோரின் கைச...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அதிய்யிப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ...
யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான ஒரு சமூகத்தினர். காரணம் அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தும் அதனை எடுத்து நடக்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிதவறிய சமூக...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் 'அல்லாஹ்...
வானங்கள் பூமிகள் படைக்கப்படுவதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் 'லவ்ஹுல் மஹ்பூலில்' படைப்பினங்களின் வாழ்வு, மரணம், வாழ்வாதாரம் போன்ற ஏனைய விடயங்கள்...
இப்னு மஸ்ஊத் கூறினார்கள் : தனது வார்த்தையில் உண்மை பேசியவரும், அல்லாஹ் உண்மைப்படுத்தியவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எங்களுக்கு அறிவ...
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் : 'மார்க்கத்தை எல்லை மீறி பின்பற்றுவோருக்கு (தீவிரமானோர்)அழிவு உண்டாகட்டுமாக' இவ்வாறு மூன்று முறை கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் 'அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது'
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாட்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு காலம் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் ( விதித்தபடி) எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாதிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) மேலும் உங்களில் ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் சொர்க்கவாதிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'சுவனம் உங்களொருவரின் செருப்பின் வாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்'.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 'அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்து விட்டு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்க்கத்துக்கு அனுப்பி சுவர்க்கத்தையும், சுவர்க்கவாசிகளுக்காக நான் தயார்செய்தவற்றையும் பார்ப்பீராக என்று கூறினான். அவர் அதனை பார்த்துவிட்டு வந்து உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக எவரும் அதன் இன்பம் பற்றி கேள்விப்பட்டால்; அதில் நுழைந்து விடவே நினைப்பர். உடனே அந்த சுவர்க்கம் வெறுக்கப்டபடக்கூடிய விடயங்களால் சூழ்ந்திருக்க கட்டளைப் பிரப்பித்தான். மீண்டும் அங்கு சென்று சுவர்க்கவாசிகளுக்கு தான் தயார்செய்தவற்றை பார்த்து வருமாறு கூறினான் அங்கு சென்று பார்த்த போது சுவர்க்கம் வெறுக்கத்தக்க விடயங்களால் சூழப்பட்டிருந்தது. அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அதனுள் எவரும் நுழைய மாட்டார்களோ என நான் பயப்படுகிறேன். பின் நரகத்தையும் நரகவாதிகளுக்கு தான் தயார்ப்படுத்திவைத்திருப்பவற்றை பார்ப்பீராக என ஜிப்ரீலிடம் அல்லாஹ் கூற, அதனைச் சென்று பார்த்த போது அது அடுக்கடுக்காக இருப்பதை கண்டார்.பின் திருப்பிவந்து உனது கண்ணியத்தின் மீது ஆணையாக அதில் எவரும் நுழைய விரும்ப மாட்டார்கள். உடனே அல்லாஹ் நரகத்தை இச்சைகளால் சூழ்ந்திருக்க கட்டளைப்பிரப்பித்தான் பின் மீண்டும் அதனை பார்த்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸ்லாம் அவர்கள் சென்று பார்த்த போது அது இச்சைகளால் சூழப்பட்டிருந்தது.உடனே திரும்பி வந்து (இறைவா) உனது கண்ணியத்தி;ன் மீது சத்தியமாக அதனுள் நுழையாது எவறும் தப்ப மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.'
அல்லாஹ்வின் தூதர் கூறியதாகஅபூ ஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்துள்ளார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது மடங்குகளில் ஒன்றாகும்;. என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே'' என்று கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள்,'(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்' என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்;: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சிறிய தந்தையிடம்; 'அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை' என்று கூறுங்கள்,நான் மறுமை நாளில் உங்களுக்கு சான்று பகர்கின்றவனாக இருப்பேன். அதற்கு அவர் ' மரண பயம் இஸ்லாத்தை ஏற்பதற்கு தூண்டியது என குரைஷிகள் என்னைக் குறைகூறும் நிலை இல்லாதிருந்தால்; நான் நிச்சயமாக உம்மை மகிழ்வித்திருப்பேன் என்று கூறினார்.அல்லாஹ்; பின்வரும் வசனத்தை இறக்கியருளினான்
: '(நபியே) நீ விரும்புபவரை நேர்வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது எனினும்; அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். (ஸுறத்துல் கஸஸ்: 56) என்ற வசனத்தை இறக்கியருளினான்