- அனைத்து விடயங்களிலும் எல்லை மீறி தீவிரமாக ஈடுபடுவதையும், வலிந்து செய்வதையும் ஹராமாக்கியிருத்தல். இவ்வழிமுறையை எல்லா விவகாரங்களிலும் தவிர்ந்திருக்குமாறு தூண்டியிருப்பதோடு, குறிப்பாக வணக்கங்கள், நல்லடியார்களை மதித்தல் போன்றவற்றில் தவிர்ந்து கொள்ளுமாறு ஊக்குவித்துள்ளமை.
- வணக்க வழிபாடுகளிலும் ஏனைய காரியங்களிலும் பரிபூரணமாக ஈடுபடுவது புகழத்தக்க விடயாமாகும். ஆனால் அவை ஷரீஆவை பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.
- முக்கியமான விடயங்களை வலியுறுத்திக் கூறுவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இங்கு குறிப்பிட்ட விடயத்தை மூன்று தடவைகள் குறிப்பிட்டார்கள்.
- இஸ்லாத்தின் தாராளத்தன்மையும் மற்றும் இலகு தன்மையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை.