அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான்...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு 'நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?' என்று கேட்பான்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
விளக்கம்
மறுமையில் அல்லாஹ் இந்தப்பூமியை தன்கைவசம் வைத்துக்கொண்டு தனது வலக்கையால் வானத்தை மடித்து அதனை ஒன்றன் மீது ஒன்றை வைத்து சுருட்டி அழித்துவிட்டு நானே அரசன், இந்தப் பூமியின் அரசர்கள் எங்கே? என்று கேட்பான். என நபியவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
Hadeeth benefits
அல்லாஹ்வின் அதிகாரமே நிலையானது. ஏனையோரின் அதிகாரம் அழிந்து போகக்கூடியவை என்பதை ஞாபகமூட்டல்.
அல்லாஹ்வின் கண்ணியமும் அவனின் வல்லமையும் அதிகாரமும் முழுமையான அரசாட்சி பற்றியும் குறிப்பிடுதல்.
Share
Use the QR code to easily share the message of Islam with others