/ ' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'

' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அதிய்யிப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான ஒரு சமூகத்தினர். காரணம் அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தும் அதனை எடுத்து நடக்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிதவறிய சமூகமாவர். அவர்கள் அறிவின்றி செயற்பட்டோர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Hadeeth benefits

  1. அறிவையும் செயல்பாட்டையும் ஒன்றுசேர பெற்றிருப்பதே கோபத்திற்குள்ளான மற்றும் வழிதவறியோரின் வழியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழிமுறையாகும்.
  2. யூத, கிறிஸ்தவ வழிமுறைகளைப் பின்பற்றுவதை விட்டும் எச்சரித்தலும், நேரான பாதையான இஸ்லாத்தைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளமையும்.
  3. யூத கிறிஸ்தவர்கள் அனைவரும் இறைகோபத்திற்கு ஆளானோர் ஆவர். என்றாலும் யூதர்களின் பிரத்தியேகமான பண்புகளில் ஒன்றாக இறை கோபமும், கிறிஸ்தவர்களின் பிரத்தியே பண்பாக வழிதவறி நடந்தமையும் காணப்படுகிறது.