- நன்மை குறைவாக இருந்தாலும் அதனைச் செய்வதில் ஆர்வமூட்டல், பாவம் சிறியதாக இருந்தாலும் அதனை விட்டும் எச்சரித்தல்.
- முஸ்லிம் தனது வாழ்வில் புரியும் செயல்களின் நிலை குறித்து எதிர்ப்பார்ப்பு மற்றும் அச்சம் ஆகிய விடயங்களை ஒன்று சேர பெற்றிருப்பது அவசியமாகும். எப்போதும் அவன் வெற்றி பெற சத்தியத்தில் உறுதியாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு, தனது நிலை குறித்து ஏமாந்து போகக் கூடாது.