/ 'முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், ...

'முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், ...

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்'.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

இந்த சமூகத்தில் உள்ள ஒரு யூதன் அல்லது கிறிஸ்தவர் அல்லது இவர்கள் அல்லாத பிறமதம் சார்ந்த எவராயினும், தங்களுக்கு நபி ஸல்லலலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மார்க்கம் பற்றிய அழைப்பு கிடைத்தும் அதனை விசுவாசிக்காது மரணித்தால் அவர் நிரந்தர நரகாவாதிகளுள் ஒருவராக மாறிவிடுவார்.

Hadeeth benefits

  1. நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம்) அவர்களின் தூதுத்துவம் உலகில் உள்ளோர் யாவருக்கும் பொதுவானது என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றமை. எனவே அவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும், அவர்களது மார்க்கத்தின் மூலம் முன்னைய அனைத்து மார்க்கங்களும் மாற்றப்பட்டுவிட்டன.
  2. யார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஏற்று ஈமான் கொள்ளவில்லையோ அவர் ஏனைய நபிமார்களை ஏற்றிருப்பினும் அவரின் ஈமானில் எவ்வித பயனும் கிடையாது.
  3. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றிக் கேள்விப்படாதோர், இஸ்லாமிய அழைப்புக் கிடைக்காதோர் சலுகை அளிக்கப்பட்டவர்களாகும். மறுமை நாளில் அவர்கள் குறித்த இறுதி தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது.
  4. மரணத்தை நேரடியாகக் காணும் வரை கடுமையான நோயிலும் சரி மரணம் சம்பவிக்க சற்று முன்னரும் சரி இஸ்லாத்தில் நுழைவதன் மூலம் பயனடையலாம்.
  5. காபிர்களின் மதங்களை – அவை யூத கிறிஸ்தவர்களின் மதமாயினும் அவற்றை - சரிபடுத்துவது இறைநிராகரிப்பாகும்.
  6. இங்கு யூத, கிறிஸ்தவர்களைக் குறித்துக் கூறக் காரணம் ஏனையோருக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகும், ஏனெனில் யூத,கிறிஸ்தவர்கள் இறைவேதம் வழங்கப்பட்டவர்கள், அவர்களது நிலையே இவ்வாறென்றால் வேதம் கொடுக்கப் படாத பிற நிராகரிப்பாளர்களின் கெதி அதை விட மோசமாகவே இருக்கும். அனைவரும் நபியவர்களின் இம்மார்க்கத்தில் நுழைந்து, கட்டுப்படல் அவசியமாகும்.