- ஷைத்தான் தீய மற்றும் அசிங்கமான விடயங்களை அலங்கரித்துக் காட்டுவதே மனிதன் மனோ இச்சையில் வீழ்வதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் அவற்றை மனம் நல்லதாக –அழகானதாக் கண்டு அதில் விருப்புக்கொள்கிறது.
- தடைசெய்யப்பட்ட ஆசாபாசங்களை விட்டும் விலகி இருக்குமாறு கட்டளையிடப்பட்டிருத்தல். ஏனெனில் அதுவே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழியாகும். மனம் விரும்பாத விடயங்களில் பொறுமையாக இருக்குமாறு பணிக்கப்பட்டிருத்தல். ஏனெனில் அதுவே சுவர்க்கத்தின் பாதையாகும்.
- உள்ளத்துடன் போராடி வணக்கவழிபாடுகளில் பிரயத்தனம் கொள்ளுதல், வணக்க வழிபாடுகளை சூழ்ந்துள்ள சிரமங்களையும், மனம் விரும்பாத விடயங்களையும் சகித்துக்கொள்வதன் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.