அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: 'இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது எம்ம...
அல்லாஹுதஆலா இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது கீழ்வானிற்கு (அவனது கண்ணியத்திற்கு ஏற்றவாறு) இறங்கி, தனது அடியார்களை தன்னிடம் பிரார்த்திக்க...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அன் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : ஹலாலும் (ஆகுமானவைகள்) தெளிவானது....
மனித நடவடிக்கைள் அல்லது விவகாரங்களில் ஒரு பொது விதி குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இங்கு தெளிவுபடுத்துகிறார்கள். அந்த விதியானது இஸ்லாம...
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே!...
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சிறுவராக இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சவாரி செய்கையில் நான் உமக்கு பயனுள்ள சில விடயங்களை கற்றுத்தரப்...
ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் அஸ்ஸகபி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி...
நபித்தோழர் ஸுப்யான் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் கடைப்பிடித்தொழுகுவதற்கு இஸ்லாத்தின் கருத்துக்கள் யாவும் பொதிந்துள்ள, அது குறித்து...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ''அழகிய முறையில் வுழூ செய்பவர...
யார் வுழுவின் ஸுன்னத்துக்களையும் அதன் ஒழுங்குகளையும் பேணி வுழூ செய்கிறாரோ அது அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக அமைந்து விடுவத...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: 'இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது எம்முடைய இரட்சகன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி , 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அன் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : ஹலாலும் (ஆகுமானவைகள்) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமான விடயத்தில் விழுந்து விடுகிறாரோ அவர்; ஹராத்தில் விழுந்து விட்டவராவார். இது தனது மந்தையை அனுமதிக்கப்படாத ஒரு வேலிக்கருகாமையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனின் செயற்பாட்டை ஒத்ததாகும். அந்தக் கால் நடைகள் அவை தடுக்கப்பட்ட அப்பகுதிக்குள் சென்று மேய்ந்து விடக் கூடிய சாத்தியம் எப்போதும் இருக்கிறது. ஆக, அதிகாரம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய ஒரு பாதுகாப்பு எல்லை உண்டு. அல்லாஹ்வின் பாதுகாப்பு எல்லை, அவன் அனுமதிக்காத(ஹராமான) காரியங்களாகும். அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள்: நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக்கொள். அவனை உனக்கு முன் கண்டுகொள்வாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி தேடினால் அல்லாஹ்விடமே தேடு. அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது. பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.
ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் அஸ்ஸகபி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெளியேறி விடுகின்றன''.
நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : ' உங்களில் தொடக்கு ஏற்பட்ட ஒருவரின்; தொழுகையை வுழூச் செய்யும் வரையில் அல்லாஹ் ஏற்க மாட்டான்'.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இவ்விரு முறை கழுவி வுழு செய்தார்கள்.
உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையான ஹும்ரான் அவர்கள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வுழு செய்த நிகழ்வை அறிவிக்கிறார்கள்: உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு 'நான் வுழூச் செய்வதைப் போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழூச் செய்ததை பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'யாரேனும் என்னுடைய இந்த வுழூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர், தாம் வுழூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' முஸ்லிமின் அறிவிப்பில்: உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் இரு கைகளையும் கழுவமுன் வுழூ செய்யும் பாத்திரத்தினுள் செலுத்த வேண்டாம். ஏனென்றால் அவரின் இருகைகளும் இரவில் எங்கிருந்தது- எதனைத் தொட்டது- என்பது பற்றி அவர் அறியமாட்டார்.
இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது; 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான ஈத்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.