- தொடக்கு ஏற்பட்ட ஒருவரின் தொழுகையானது, அவர் பெருந்தொடக்குடையவராக இருந்தால் குளித்து சுத்தமாவதன் மூலமும், சிறு தொடக்குடையவராக இருப்பின் அவர் வுழு செய்வதன் மூலமுமே அங்கீகரிக்கப்படுகிறது.
- வுழு என்பது: நீரை எடுத்து வாயில் இட்டு நன்றாக அலம்பி அதனை கொப்பளித்தல். பின் நீரை மூச்சால் நாசியினூடாக அடிப்பகுதி வரை உள்ளிழுத்து அதனை சிந்தி வெளியேற்றல். பின் முகத்தை மூன்று தடவைகள் கழுவுதல், பின் இருகைகளையும் முன்னங்கையுட்பட மூன்று தடவைகள் கழுவுதல். பின் தலை முழுவதையும் ஒரு தடவை தடவுதல்; -ஈரக்கையால்- மஸ்ஹ் செய்தல், பின் கரண்டைக் கால் உட்பட இருகால்களையும் மூன்று தடவைகள் கழுவுதல்.