நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அன் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : ஹலாலும் (ஆகுமானவைகள்) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமான வற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்தையும், மானத்தையும் பாதுகாத்துக் கொண்டார். யார் சந்தேகமான விடயத்தில் விழுந்து விடுகிறாரோ அவர்; ஹராத்தில் விழுந்து விட்டவராவார். இது தனது மந்தையை அனுமதிக்கப்படாத ஒரு வேலிக்கருகாமையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடையனின் செயற்பாட்டை ஒத்ததாகும். அந்தக் கால் நடைகள் அவை தடுக்கப்பட்ட அப்பகுதிக்குள் சென்று மேய்ந்து விடக் கூடிய சாத்தியம் எப்போதும் இருக்கிறது. ஆக, அதிகாரம் பெற்ற ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய ஒரு பாதுகாப்பு எல்லை உண்டு. அல்லாஹ்வின் பாதுகாப்பு எல்லை, அவன் அனுமதிக்காத(ஹராமான) காரியங்களாகும். அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
விளக்கம்
மனித நடவடிக்கைள் அல்லது விவகாரங்களில் ஒரு பொது விதி குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இங்கு தெளிவுபடுத்துகிறார்கள். அந்த விதியானது இஸ்லாமிய சட்ட ஒழுங்கில் அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன : தெளிவான ஹலால், தெளிவான ஹராம், ஹலாலிற்கும் ஹராத்திற்கும் மத்தியில் உள்ள தெளிவற்றதும் சந்தேகத்திற்கிடமானதும் , மக்களில் அதிகமானோர் அவற்றின் சட்டம் குறித்து அறியாத விடயங்கள்.
ஆகவே, யார் மார்க்க விடயங்களில் சந்தேகமான விடயங்களை விட்டுவிடுகிறாறோ ஹராத்தில் விழுவதிலிருந்து விலகி தனது மார்க்கத்தை காப்பாற்றிக் கொண்டார். இதனைச் செய்வதால் மக்களிடமிருந்து வரும் குறை, விமர்சனப் பேச்சுக்களை விட்டும் இவரது மானமும் பாதுகாக்கப்பட்டு விடுகின்றது. சந்தேகமானவற்றைத் தவிர்ந்து கொள்ளாதவர் ஒன்றோ ஹராத்தில் வீழ்ந்திடுவார், அல்லது மக்களின் இழி பேச்சிற்கும் ஆளாவார். மார்க்க விவகாரங்களில் சந்தேகமான விடயங்களை புரிபவரின் நிலையை தெளிவு படுத்த பின்வரும் ஒர் உதாரணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த விவகாரம் நில உரிமையாளரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்ட ஓர் நிலத்திற்கருகில் கால் நடைகளை மேய விட்டவனைப் போன்றாகும். அதற்கருகில் மேய்வதால் அப்பிராணிகள் அப்பாதுகாப்பு வேலிக்குள் சென்று மேய வாய்ப்புள்ளது. இவ்வாறுதான்; சந்தேகமானதைச் செய்பவனும், அதன் மூலம் தெளிவான ஹராத்திற்கு அருகில் நெருங்கி, அதில் வீழ்ந்திட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உடலில் இதயம் எனும் ஒரு சதைத்துண்டு இருப்பதாகவும், அது சீரானால் முழு உடலும் சீராகிவிடும் எனவும் அது கெட்டுப்போனால் முழு உடலும் கெட்டு விடும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
Hadeeth benefits
சட்டம் தெளிவற்ற, சந்தேகத்திற்கிடமானவற்றை தவிர்ந்து கொள்ள ஆர்வமூற்றப்பட்டுள்ளமை.
Share
Use the QR code to easily share the message of Islam with others