/ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இவ்விரு முறை கழுவி வுழு செய்தார்கள்...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இவ்விரு முறை கழுவி வுழு செய்தார்கள்...

அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுவின் உறுப்புக்களை இவ்விரு முறை கழுவி வுழு செய்தார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

சில வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுசெய்தால் வுழுவின் உறுப்புக்களை இரு தடவைகள் கழுவக்ககூடியவராக இருந்தார்கள். அதாவது வாய்க்கொப்பளித்தல், நாசுக்கு நீர் செலுத்துதல் உள்ளடங்களாக முகம், இருகைகள், மற்றும் இருகால்களை இரு தடவைகள் கழுவினார்கள்.

Hadeeth benefits

  1. வுழுவின் உறுப்புகளை ஒவ்வொரு தடவை கழுவுவதே கடமையாகும்-வாஜிபாகும் அதற்கு மேலதிகமாக -இரு முறை, பல முறை- கழுவுவது முஸ்தஹப்பாகும்.
  2. சில வேளைகளில் இவ்விரு தடவைகள் வுழுவின் உறுப்புகளை கழுவி வுழு செய்வது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும்.
  3. தலையில் ஒரு தடவை மஸ்ஹு -ஈரக்கைகளால் தடவுதல்- செய்தல் ஷரீஆவின் வழிகாட்டலாகும்.