- ஏகத்துவம் , ஒழுக்கங்கள் உள்ளிட்ட மார்க்க விடயங்களை குழந்தைகளுக்கும் இளம் சிறார்களுக்கும் கற்பிப்பதன் முக்கியத்துவம் இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது.
- செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
- அல்லாஹ்வை மாத்திரமே சார்ந்து, அவனிடமே பொறுப்புச் சாட்டுமாறு ஏவப்பட்டுள்ளது, பொறுப்பாளிகளில் அவனே மிகச் சிறந்தவன்.
- அல்லாஹ் அனைத்து விடயங்களையும் நிர்ணயித்துள்ளதால் கழா, கத்ரை (விதி) ஈமான் கொண்டு அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுதல்.
- யார் அல்லாஹ்வின் மார்க்கத்தை-கட்டளையை- வீணடிக்கிறானோ அவனை அல்லாஹ் பாதுகாக்காது கைவிட்டுவிடுவான்;.