- வுழு செய்ய ஆரம்பிக்க முன் ஒருவர் தூங்கி எழுந்திருக்கா விட்டால் பாத்திரத்தினுள் கையை இடுவதற்கு முன் கழுவிக் கொள்வது முஸ்தஹப்பான வரவேற்கத்தக்க விடயமாகும், தூங்கி எழுந்திருந்தால் இரு கைகளையும் கழுவுவது கடமையாகும்.
- மாணவர்களுக்கு மிக விரைவில் விளங்கி, மனதில் பதிவதற்கான மிக ஏதுவான வழிமுறையைக் கற்பித்தலின் போது தெரிவு செய்வது ஆசிரியருக்கு அவசியமாகும். அவற்றுள் ஒன்றுதான் செயன்முறைக் கற்பித்தலாகும்.
- தொழுபவர்; உலக விடயங்களுடன் தொடர்பான ஊசலாட்டங்களைத் தவிர்ப்பதும், அதற்காக முயற்சிப்பதும் அவசியமாகும். ஏனெனில் தொழுகையின் முழுமைத்துவம் மனதை ஒர்மைப்படுத்தி அதில் ஈடுபாட்டுடன் இருப்பதில் தான் தங்கியுள்ளது. மேலும் மனதை ஒருமுகப்படுத்தி தொழுகையில் ஈடுபடாவிட்டால் தேவையில்லாத மன ஊசலாட்டங்களிருந்து தற்காத்துக்கொள்வது சிரமமான விடயமாகும். ஆகையால் தேவையற்ற எண்ணங்களில் மனதை அலையவிடாது மனதைக் கட்டுப்படுத்துவதில் கடும் பிரயத்தனம் மேற்கொள்வது அவசியமாகும்.
- வுழு செய்யும்போது வலதை முற்படுத்துவது முஸ்தஹப்பான –வரவேற்கத்தக்க –விடயமாகும்.
- வாய்க் கொப்பளித்தல், மூக்கிற்குத் நீர் செலுத்தி அதனை வெளியேற்றல் ஆகிய விடயங்களில் பிரஸ்தாப ஒழுங்கை கடைப்பிடிப்பது மார்க்க வழிகாட்டலாகும்.
- முகத்தையும், இரு கைகள் மற்றும் இரு கால்களை மூன்று தடவைகள் கழுவுதல் வரவேற்கத்தக்கதாகும். ஒரு தடவை கழுவுதல் கடமையாகும்.
- மேற்படி ஹதீஸில் குறிப்பிடப்பட்டதிற்கினங்க வுழு செய்து இரண்டு ரக்அத்துகளை தொழுவதினால் பாவங்களுக்கான அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கிறது.
- வுழுவின் உறுப்புக்கள் ஒவ்வொன்றினையும் கழுவுவதற்கான எல்லைகள் உண்டு அவைகள் பின்வருமாறு : முகத்தின் எல்லை; நீளவாக்கில் வழமையில் நெற்றியில் முடி முளைக்குமிடத்திலிருந்து ஆரம்பித்து தாடி உட்பட கழுத்தின் ஆரம்பப்பகுதிவரையிலாகும். அகலவாக்கில் ஒரு காதுச்சோணையிலிருந்து மறு காதுச்சோணைவரையிலாகும். கையின் எல்லை : விரல் நுனியிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரையிலாகும். அதாவது மேல்கை மற்றும் முழங்கைக்கு இடைப்பட்ட பகுதியாகும். தலையின் எல்லை : வழமையில் தலை முடி முளைக்குமிடத்திருந்து இருபக்க முக ஓரமாக பிரடிவரைக்குமான பகுதியாகும். இரு காதுகளையும் மஸ்ஹ் செய்தல் தலையில் மஸ்ஹ்செய்வதில் அடங்கிவிடும். காலின் எல்லை : காலின் பாதம் மற்றும் குதிகால் உட்பட கெண்டைக்கால் வரையிலாகும்.