- புறம் பேசுவதும், சிறுநீர் கழித்துவிட்டு முறையாக சுத்தம் செய்யாது இருத்தலும் மிகப்பெரும் பாவங்களில் ஒன்றாகவும், கப்ரில் வேதனை செய்யப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.
- கப்ருடைய வேதனை போன்ற மறைவான சில விடயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நுபுவத்திற்கு சான்றாக அல்லாஹ் வெளிக்காட்டுகிறான்.
- ஈத்தம் மட்டையை பிளந்து அதனை அந்த கப்ருகளின் மீது நட்டிய செயலானது, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கே உரிய பிரத்தியேகமான விடயமாகும். காரணம் கப்ரில் குறித்த இரு தோழர்களின் நிலமையை அல்லாஹ் நபியவர்களுக்கு அறியச்செய்தான். இந்த செயலை மற்றவர்கள் ஒப்பிட்டு செய்வது கூடாது. காரணம் அவர்களைப் பொறுத்தவரை கப்ரில் இருப்போரின் நிலை அவர்களுக்கு தெரியாது.