'இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது எம்முடைய இரட்சகன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: 'இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது எம்முடைய இரட்சகன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி , 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
விளக்கம்
அல்லாஹுதஆலா இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது கீழ்வானிற்கு (அவனது கண்ணியத்திற்கு ஏற்றவாறு) இறங்கி, தனது அடியார்களை தன்னிடம் பிரார்த்திக்குமாறும் அதற்கு அவன் பதிலளிப்பதாகவும் ஆர்வமூட்டுகிறான். மேலும் அவர்கள் விரும்பியதை தன்னிடம் கேட்குமாறும் அவ்வாறு தன்னிடம் கேட்போருக்கு வழங்குவதாகவும் அவன் தூண்டுகிறான். மேலும்; தங்களது பாவங்களுக்கு தன்னிடம் பாவமன்னிப்புக்கோருமாறும் அவ்வாறு மன்னிப்புக்கோரும் முஃமினான அடியார்களை மன்னிப்பதாகவும் அவன் அழைப்பு விடுப்பதாகவும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்து கிறார்கள்.
Hadeeth benefits
இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் புரியும் தொழுகை, பிரார்த்தனை, பாவமன்னிப்புக் கோருதலின் சிறப்பு.
இந்த ஹதீஸை செவிமடுக்கும் ஒரு நபர், துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்களை பயன்படுத்திக் கொள்வதில் அதீத ஆர்வம் கொள்வது அவசியமாகும்.
Share
Use the QR code to easily share the message of Islam with others