நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் எந்த சிரமுமின்றி எல்லா வேளைகளிளும் இலகுவாக கூறக்கூடிய இரண்டு வார்த்தைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வப...
யார் தினமும் 'ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' (அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்ற வார்த்தையை –தஸ்பீஹை- கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கட...
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் பு...
புறச்சுத்தம்; வுழூ மற்றும் குளித்தலினால் நிகழ்கிறது, அது தொழுகைக்கான நிபந்தனைகளில் ஒன்று என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். 'الحمد لل...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்ல...
இந்த மகத்தான வார்த்தைகளினால் அல்லாஹ்வை நினைவுகூர்வது உலகம் அதில் உள்ளவற்றைவிடவும் சிறந்தது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள் அந்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (ل...
இந்த ஹதீஸில் எமக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திக்ரில் மிகவும் சிறப்புக்குரியது :லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தை எனக் குறிப்பிடுகிறார்கள். இ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனுக்கு மிகவும் பிரியத்திற்குரியவையுமாகும். அவை : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். திருக்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஒரு ஆதாரமாகும்; தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்' (அல்லாஹ் தூயவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் உதயமாகும் இவ்வுலகைவிடவும் எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) என்பதாகும். துஆவில் சிறந்தது அல்ஹம்து லில்லாஹ் ( الحمد لله) என்பதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைதான் செவிமடுத்ததாக கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா அவர்கள் அறிவிக்கிறார்கள். 'யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் தங்குவதற்காக இறங்கி பின்னர் 'அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்' (பொருள் : அல்லாஹ்வின் பூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்துப் படைப்புகளின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறிப் பிரார்த்தித்தால், தங்கிய அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது'.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுமைத் அல்லது அபூ உஸைத் அறிவிக்கிறார்: உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்: ஓர் மனிதர் தனது வீட்டினுள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறினால் ஷைத்தான் தனது நண்பர்களிடத்தில் உங்களுக்கு இரவில் தங்குவதற்கான இடமோ இரவுணவோ கிடையாது என்று கூறுகிறான். அந்த மனிதர் வீட்டினுள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு (பிஸ்மில்) கூறாது நுழைந்து விட்டால் ஷைத்தான் தனது சகாக்களிடம் உங்களுக்கு தங்குமிடம் கிடைத்துவிட்டது என்று கூறுவான். அதே போல் உண்ணும் போது அல்லாஹ்வை நினைவு கூறாதிருந்தால் (பிஸ்மில் கூறாதிருந்தால்) ஷைத்தான் தனது சகாக்களிடத்தில் உங்களுக்கு தங்குமிடமும் இரவுஉணவும் கிடைத்து விட்டது என்று கூறுவான்'.