நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்; நிச்சயமாக அல்லாஹ் சாதாரண சூழ்நிலைகளின் போது அவனது க...
சட்டதிட்டங்கள்,வணக்கவழிபாடுகள்; மற்றும் நியாயமான காரணம் நிமித்தம் அதாவது பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்கியும் சேர்த்தும் தொழுதல், போன்ற அல்லாஹ்வால்...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான்...
அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏதேனும் நலனைத் தர நாடினால் அவர்களின் பாவ காரியங்களின் குற்றப் பரிகாரத்துக்கும், அவர்களின் அந்தஸ்த்தின் உயர்வுக்கும் காரணமாக...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா மற்றும் அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் கூறுகின்றார்கள்: 'ஒரு முஸ்லிமை தைக்கும்...
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோய்கள் கவலைகள் துன்பங்கள் சோதனைகள் பேரிடர்கள் கஷ்டங்கள் பயம் பசி –உடலில் த...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போத...
அல்லாஹ்வின் அருள் மற்றும் கருணை குறித்து இந்த ஹதீஸில் நபியவர்கள் விவரிக்கிறார்கள். ஒரு முஸ்லிம்; அவன் ஆரோக்கியமாக ஊரில் தங்கியிருக்கும் போது நற்செயல்க...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடு...
அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்; நிச்சயமாக அல்லாஹ் சாதாரண சூழ்நிலைகளின் போது அவனது கடமைகளை பூரணமாக செய்வதை விரும்புவது போன்று அசாதாரண சூழ்நிலைகளில் அவனது சலுகைகளைப் பயன்படுத்ததுவதை விரும்புகிறான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான். (அவருக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்துவான்).

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா மற்றும் அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் கூறுகின்றார்கள்: 'ஒரு முஸ்லிமை தைக்கும் முள் உட்பட, அவனுக்கு நேரிடும் சிரமம், நோய், கவலை, துக்கம், மனவேதனைகள் ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவனின் பாவத்தின் சிலதை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது அவனுக்கு எழுதப்படும்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான் அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை பகிர்ந்தளிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அறிஞர்களிடம் பெருமையடித்துக்; கொள்வதற்காகவோ,முட்டாள்களுடன் தர்க்கம் புரிவதற்காகவோ,சபைகளில் (ஏனையோரைவிட) முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ,அறிவைத் தேடாதீர்கள்.யார் இவ்வாறு நடந்து கொள்கிறோ அவருக்கு நரகமே கிடைக்கும் ';

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'.

அபூ அப்திர்ரஹ்மான் அஸ்ஸுலமி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் எமக்கு அல்குர்ஆனை கற்றுத்தந்தோர் தாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் பத்து வசனங்களை கற்றுக்கொள்ளக்கூடி யவர்களாக இருந்ததோடு, கற்ற அந்தப் பத்துவசனங்கில் உள்ள விடயங்களை கற்று அமல் செய்யும் வரையில் மற்றைய பத்து வசனங்களை அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை எனக் கூறினார்கள் எனவே இதனால் நாம் அறிவையும் அமலையும் அறிந்து கொண்டோம் என்று கூறினார்கள்;

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'யார் அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனில் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும், அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும். அலிப், லாம், மீம் என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன், மாறாக அதில் அலிப் (ا) ஓரெழுத்து, (ل) லாம் ஓரெழுத்து, (م) மீம் ஓரெழுத்தாகும்'.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். 'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று அவரிடம் கூறப்படும்'

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் எவரேனும் பெரிய, பருமனான, கர்ப்பிணியாக இருக்கும் மூன்று ஒட்டகங்களை தனது குடும்பத்தாரிடம் திரும்பி வரும்போது பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என நபியவர்கள் கேட்டபோது நாங்கள்: 'ஆம்' என்றோம். அப்போது அவர்கள் 'உங்களில் ஒருவர் தனது தொழுகையில் ஓதும் மூன்று வசனங்கள் அவருக்கு மூன்று பெரிய, கொழுத்த, கர்ப்பிணி ஒட்டகங்களை விட சிறந்தவை.' எனக் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: இந்தக் குர்ஆனை மனனமிட்டு (அதை ஓதி ) பேணி வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) மறந்து விடக் கூடியதாகும்.