- மார்க்க அறிவின் சிறப்பும் மகிமையும் குறிப்பிடப் பட்டுள்ளதுடன் அதனைக் கற்பதற்கும் ஆர்வமூட்டப் பட்டிருத்தல்.
- இந்த சமூகத்தின் இருப்புக்கு சத்தியத்தை பின்பற்றி அதனைப் பிரச்சாரம் செய்தல் இன்றியமையாத அம்சமாகும். ஒரு பிரிவினர் இப்பணியை கைவிட்டாலும் இன்னொரு தரப்பினர் மேற்கொள்ளல் வேண்டும்.
- மார்க்கத்தைக் கற்று தெளிவுபெறுதல் அல்லாஹ் தனது அடியாருக்கு நலவை நாடுவதற்கான ஒரு விடயமாக காணப்படுகிறது.
- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரமும் அவனின் நாட்டப்படியும் தனக்கு வழங்கப்பட்டதை கொடுப்பவர்களாக இருப்பாரகள். ஆனால் அவர்கள் எதனையும் சொந்தமாகப் பெற்றவராக இல்லை.