- அல் குர்ஆனை அதிகம் ஓதுவதை ஆர்வமூட்டல்.
- அல்குர்ஆனை ஓதுபவருக்கு ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு நன்மை கிடைப்பதுடன் அதற்கு பத்துமடங்கு கூலிகளும் உண்டு.
- அல்லாஹ்வின் அருளினாலும், தயாளத்தினாலும் அடியார்களுக்குக் கூலிகளைப் பன்மடங்காக்குவதன் மூலம் அவனின் அருளின் விசாலம் தெளிவாகின்றது.
- ஏனைய வார்த்தைகளை விடவும் அல்குர்ஆன் பெற்றிருக்கும் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப் படுவதோடு, அது அல்லாஹ்வின் வார்தை என்பதினால் அதனை ஓதுவதும் வணக்கமாகும்.