/ 'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'

'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'அல்குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பிப்பவரே உங்களில் சிறந்தவராவார்'.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

முஸ்லிம்களில் மிகவும் சிறப்புக்குறியவரும், உயர் அந்தஸ்த்தையும் பெற்றவர் யார் என்பதை நபியவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். அவர் யாரென்றால் அல்குர்ஆன் ஓதி மனனம் செய்து அழகிய முறையில் தர்த்தீலாக ஓதி, அதனை விளங்கி தானும் அமல் செய்வதுடன் அல்குர்ஆனிய கலைகளை பிறருக்கும் கற்றுக் கொடுப்பவராவார்.

Hadeeth benefits

  1. வார்த்தைகளில் மிகவும் சிறப்பான அல்லாஹ்வின் வார்தையான அல்குர்ஆனின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  2. தனக்குள் மாத்திரம் அல்குர்ஆனிய அறிவை வைத்துக்கொள்ளாது பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே மிகவும் சிறப்பான அறிஞராவார்.
  3. அல்குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பது என்பது அதனைப் முறையாக ஓதுதல், அதன் கருத்துக்களையும் சட்டதிட்டங்களையும் அறிந்து கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கயுள்ளது.