- தொழுகையில் அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு விபரிக்கப்பட்டிருத்தல்.
- நற்காரியங்கள்; அழிந்து போகும் இவ்வுலகப்பொருட்களை விட சிறந்தும் நிலையானதுமாகும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றமை.
- இந்த சிறப்பானது மூன்று வசனங்களை மாத்திரம் ஒதுவதுடன் வரையறுக்கப்பட்டதல்ல, மாறாக தொழுபவர் தனது தொழுகையில் அல்குர்ஆன் வசனங்களை எவ்வளவு அதிகம் ஒதுகிறாரோ அதற்கேற்ப அவரின் கூலி கர்ப்பிணி ஒட்டகைகளின் எண்ணிக்கையின் அளவை விடவும் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்த கொள்ள வேண்டும்.