- இறைநம்பிக்கையாளர்களான தனது அடியார் களுக்கு அல்லாஹ் செரிந்துள்ள அருட்கொடை பற்றி விபரித்துள்ளதுடன் அவர்களுக்கு ஏற்படுகின்ற சாதாரண தீங்குகள் மூலம் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றமை குறித்த அவர்களுடனான இறை கருணை பற்றியும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றமை.
- ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்கு ஏற்படுகின்ற சோதனைகளில் அல்லாஹ்விடத்தில் நன்மை எதிர்பார்ப்பதுடன் அவனின் அந்தஸ்த்துக்கள் உயர்த்தப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக அவ்வாறான சிறிய மற்றும் பெரிய சோதனைகளில் அவன் பொறுமைக் காப்பதும் அவசியமாகும்.