என் சமூகத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவர்.எனினும் தன் குற்றத்தை அம்பலப்படுத்தியவர்களைத் தவிர.இரவு காலத்தில் பாவ காரியம் ஒன்றைச் செய்த மனிதனின் தவறை அல...
அல்லாஹ் முஸ்லிம்கள் யாவரினதும் குற்றங்களை மன்னிப்பான்.ஆனால் எவன் இரவு காலத்தில் பாவமான காரியத்தில் ஈடுபட்டிருந்து அதனை அல்லாஹ் மறைத்து வைத்திருந்தும்...
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் உரை நிகழ்த்தினார்க...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட தினத்தில் உரைநிகழ்த்தினார்கள், அதில் அவர்கள் : மக்களே நிச்சயமாக அல்லாஹ் ஜாஹிலிய்யக்கால ஆணவ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் (அசத்தியத்த...
மனிதர்களில் சத்தியத்திற்கு அடிபணியாது எப்போதும் அதிகமாக குதர்க்கம் புரிந்து கொண்டிருப்பவனையும், தர்கத்தினால் தன்னை பாதுகாத்துக்கொள்ள முயல்பவனையும், அல...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்ட...
இந்த ஹதீஸில், இரு முஸ்லிம்கள் தமது வாட்களினால் மற்றவரை கொலை செய்து அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சந்தித்துக் கொண்டால் கொலைசெய்தவர் தனது தோழரை கொல...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: யார் எமக்கெதிராக ஆயுதமேந்துகிறாரோ அவர் எ...
முஸ்லிம்களை அச்சுருத்தி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காக முஸ்லிம்களுக்கெதிராக ஆயுதமேந்துவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்...
என் சமூகத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவர்.எனினும் தன் குற்றத்தை அம்பலப்படுத்தியவர்களைத் தவிர.இரவு காலத்தில் பாவ காரியம் ஒன்றைச் செய்த மனிதனின் தவறை அல்லாஹ் மறைத்து வைத்த போது அவன் காலையில் எழுந்ததும்,:இன்னவனே நான் நேற்றிரவு இப்படியெல்லாம் செய்தேன்,என்று அல்லாஹ் மறைத்து வைத்த தன்னுடைய தவறை அவன் காலையில் எழுந்ததும் இப்படி வெளிப்படுத்துவானாகில்,அது தன் தவறை அம்பலப்படுத்துதலாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுராரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் உரை நிகழ்த்தினார்கள். அதில் அவர்கள் கூறினார்: ''மக்களே, நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து ஜாஹிலிய்யாவின் ஆணவத்தையும், முன்னோர்களைப் பற்றிய பெருமைகொள்வதையும் நீக்கிவிட்டான். ஆகவே தற்போது இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: அல்லாஹ்வின் பார்வையில் நேர்மையான, பக்தியுள்ள மற்றும் கண்ணியமான நபர். அல்லாஹ்வின் பார்வையில் ஒரு பொல்லாத, பரிதாபத்திற்குரிய, அற்பமான மனிதர். மக்கள் ஆதமின் பிள்ளைகளாவர், அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன். (ஹுஜுராத் : 13).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'மனிதர்களில் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் (அசத்தியத்தில்;) கடுமையாக சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டு அதில் கொலைசெய்தவனும், கொலைசெய்யப்பட்டவனும் நரகத்திற்கே செல்வார்கள் என்று கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! கொலை செய்தவன் (நரகத்திற்குச் செல்வது நியாயமானது) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என நான் அவர்களிடம் கேட்டதற்கு, நபியவர்கள் 'அவர் இவரைக் கொல்ல வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: யார் எமக்கெதிராக ஆயுதமேந்துகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்'
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : 'இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்''.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (மேலும்) அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஆகுமனதல்ல, இவர்களில் ஸலாமை கொண்டு முதலில் முந்திக்கொண்டவரே இவர்கள் இருவரில் சிறந்தவராவார்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் எனக்கு உத்தரவாதமளிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன்'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எனக்குப் பின்னர் ஆண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய (சோதனையாக) பெண்களை விட வேறெதனையும் நான் விட்டுச் செல்ல வில்லை'.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நிச்சயமாக இந்த உலகம் இனிமையும் பசுமையும் நிறைந்தவை. நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாஹ் உங்ளை இதில் பிரதிநிதியாக-முகவர்களாக- ஆக்கியுள்ளான். ஆகவே நீங்கள் உலகவிடயங்களில் மூழ்கிவிடுவதிலிருந்தும் மற்றும் பெண்கள் விடயங்களில் மதிமயங்கி விடுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இஸ்ரவேல் சந்ததிகளில் தோன்றிய குழப்பங்களில் முதன்மையானது பெண்கள் விவகாரத்திலாகும்”.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தமானது உங்கள் மனைவியரின் கற்பை ஹலாலாக அடைந்து கொள்ளச் செய்து கொண்ட ஒப்பந்தமாகும்'.