- கனவன் மனைவி தரப்பில் இடப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது அவசியமாகும். ஆனால் அந்த நிபந்தனைகள் அனுமதிக்கப்பட்ட ஹலாலான ஒன்றை ஹராமாக்குவதோ அல்லது ஹராமான ஒன்றை ஹலாலாக்குவதாகவோ அமைவது கூடாது.
- ஏனைய நிபந்தனைகளை விட திருமண நிபந்தனைகளை நிறைவேற்றுவது மிக வலியுறுத்தப்படுகின்றது. ஏனெனில் இது மனைவியை ஹலாலாக்கிக் கொள்வதற்குப் பதிலாக இடப்படும் நிபந்தனையாகும்.
- திருமணத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது வலியுறுத்தப்பட்டிருப்பது, இஸ்லாம் திருமணத்திற்கு வழங்கியிருக்கும் உயர் அந்தஸ்தை பிரதிபளிக்கிறது.