'தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் எனக்கு உத்தரவாதமளிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன்'...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் எனக்கு உத்தரவாதமளிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன்'.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்
விளக்கம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு விடயங்கள் குறித்து அறிவித்துள்ளார்கள். ஒரு முஸ்லிம் பின்வரும் இரண்டு விடயங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவன் சுவர்க்கம் நுழைவான்'
முதலாவது : அல்லாஹ்வை கோபப்படுத்தும் விடயங்களை பேசுவதை விட்டும் நாவை பாதுகாத்தல் .
இரண்டாவது : மானக்கேடானவற்றில் வீழ்வதை விட்டும் மறையுறுப்பை பாதுகாத்தல்.
மேலே குறிப்பிடப்பட்ட இரு உறுப்புகளினாலும் அதிக பாவச்செயல்களும் குற்றங்களும் நிகழ்கின்றன
Hadeeth benefits
மறையுறுப்பையும், நாவையும் பாதுகாப்பது சுவர்க்கம் செல்வதற்கான வழியாக அமையும்.
நாவையும் மறையுறுப்பையும் விஷேடமாகக் குறிப்பிட்டதற்கான காரணம் அவை இரண்டுமே மனிதனின் இம்மை மறுமை துன்பத்திற்கும் சோதனைக்கும் மிகப்பெரும் அடிப்படையாக இருப்பதினாலாகும்.
Share
Use the QR code to easily share the message of Islam with others