- ஒரு தீமையை செய்வதற்காக உள்ளத்தால் உறுதி கொண்டு அதற்குரிய செயற்பாடுகளில் (காரண கரியங்களில்) ஈடுபட்டால் அதற்குரிய தண்டனை கிடைக்கும்.
- முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் சண்டையிட்டுக்கொள்வது கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குரிய தண்டனை நரகம் என வாக்களிக்கப்பட்டிருத்தல்.
- அத்துமீறி நடப்போர், குழப்பம் விளைவிப்போர் ஆகியோரின் அட்டகாசங்களை கட்டுப்படுத்தும் முகமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் சண்டையிட்டுக் கொள்வது மேற்படி எச்சரிக்கைக்குள் உள்ளடங்கமாட்டாது.
- பெரும்பாவம் செய்தவர் குறித்த பாவத்தை செய்ததினால் மாத்திரம் அவன் காபிராகி விடமாட்டான். காரணம் நபியவர்கள் இங்கு சண்டையில் ஈடுபட்ட இருவரையும் முஸ்லிம்களென்றே அடையாளப்படுத்தியுள்ளமை இதற்கு ஆதாரமாக உள்ளது.
- இரண்டு முஸ்லிம்கள் உயிரைப்பறிக்கும் எந்த ஆயுதமாயினும் அதன் மூலம் சண்டையிட்டு ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டால் கொலை செய்தவருக்கும் கொல்லப்பட்டவருக்குமான இருப்பிடம் நரகமாகும். இங்கு வாள் என ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருப்பது உதாரணத்திற்காகவே அன்றி வாளினால் சண்டையிட்டு மரணித்தால்தான் நரகம் எனப் புரிந்து கொள்ளக் கூடாது.