- இந்த ஹதீஸ் மரணித்தோரை ஏசுவது-குறைகூறுவது- ஹராம் என்பதற்கான ஓர் ஆதாரமாகும்.
- மரணித்தோரை ஏசுவது மற்றும் குறைகூறுவதை தவிர்ப்பதில் உயிரோடு இருப்போரது நலன் தங்கியிருப்பதோடு, குரோதம் வெறுப்பு போன்றவற்றிலிருந்து சமூகத்தின் சீர்மை பேணப்படுதல்.
- மரணித்தோரை ஏசுவது தடுக்கப்பட்டிருத்தலின் பின் உள்ள நுட்பம் யாதெனில் அவர்கள் செய்த நன்மை, தீமைகளை அவர்கள் கொண்டு சென்று விட்டார்கள், பின்னால் வந்தோரின் ஏசுதல், குறை கூறல் அவர்களுக்கு எப்பயனையும் அளிக்காது, அவ்வாறு அவர்களை குறைகூறுவதினாலும் ஏசுவதினாலும் உயிரோடுள்ள அவர்களின் உறவினர்களை தான் பாதிப்பதுடன் அவர்களுக்கு நோவினையாகவும் அமைந்துவிடும்.
- எவ்வித நலனுமற்ற விடயங்களை மனிதன் பேசுவது ஆகாது.